அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பிரத்யேக விளம்பரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பிரத்யேக விளம்பரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோவை, மசக்கலிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கைக்காக பிரத்யேக முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவை, மசக்கலிபாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8 வகுப்பு வரைக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விளம்பர நோட்டீஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் விநியோகிப்பட்டு வருகிறது. அதில், ஒவ்வொரு வகுப்பறைக்கும் அதிவேக இணைய வசதியுடன் கூடிய தனித்தனி கணினி வசதி உள்ள தமிழகத்தின் முதல் மாநகராட்சி பள்ளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்றுத்தரப்படும் என்றும், மாணவர்களுக்கு நடனம், கராத்தே, பறை, அபாகஸ், யோகா, சதுரங்கம், பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுத்தரப்படும் எனவும் பள்ளியின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைத்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews