'டூப்ளிகேட் லைசென்ஸ்' பெற 'நோட்டரி அபிடவிட்' தேவையா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

'டூப்ளிகேட் லைசென்ஸ்' பெற 'நோட்டரி அபிடவிட்' தேவையா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டால், 'டூப்ளிகேட்' லைசென்ஸ் பெற, 'நோட்டரி அபிடவிட்' தேவையா என்பதில், போக்குவரத்து துறை அதிகாரிகள் இடையே, குழப்பம் நீடிக்கிறது.
சென்னை, அய்யப்பன் தாங்கலை சேர்ந்தவர், சிட்டிசன் செந்தில். இவர், டூப்ளிகேட் லைசென்ஸ் பெற, பூந்தமல்லி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரிடம், வழக்கறிஞர் வழங்கும், நோட்டரி அபிடவிட் இணைக்கும் படி, அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரதமர் மோடி, 2016ல், 'சாதாரண மற்றும் அன்றாட நடைமுறை பணிகளுக்கு, நோட்டரி அபிடவிட் என்ற, வழக்கறிஞர் சாட்சியம் கேட்கக்கூடாது; விண்ணப்பதாரரின் சுயசான்றிட்ட சாட்சியம் பெற்று வழங்க வேண்டும்' என, அரசு துறைகளுக்கு உத்தரவிட்டார்.விளக்கம்இதைச் சுட்டிக்காட்டிய செந்தில், சுய கையெழுத்திட்ட சான்று அளித்து, டூப்ளிகேட் லைசென்ஸ் பெற்றார்.
இதுதொடர்பாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம், அவர் விளக்கம் கேட்டார். அதற்கு, 'ஒவ்வொரு மாநில போக்குவரத்து துறைக்கும், ஒவ்வொரு மாதிரியான நடைமுறை உள்ளது.'தமிழக போக்குவரத்து துறைக்கு, உங்களின் கேள்வியை அனுப்பி உள்ளோம்' என்ற பதில் வந்தது.இதையடுத்து, தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, 'உங்கள் முகவரி, பூந்தமல்லி, ஆர்.டி.ஓ.,க்கு உட்பட்டதால், அங்கு அனுப்பப்பட்டுள்ளது' என, பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிட்டிசன் செந்தில் கூறியதாவது:டூப்ளிகேட் லைசென்ஸ் பெற, நோட்டரி அபிடவிட் தேவையா, இல்லையா என்பதை, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தான் முடிவு செய்வார்களா... அப்படி என்றால், தமிழக போக்குவரத்து துறைக்கென, தனி வரையறை ஏதும் இல்லையா என்று தெரியவில்லை.விதிமீறலாஏற்கனவே, எனக்கு வழங்கப்பட்ட லை சென்ஸ், சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது விதிமீறலா என்பதை, போக்குவரத்து துறை விளக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளதை, கடிதங்களின் வாயிலாக அறிய முடிகிறது. போக்குவரத்து துறை கமிஷனர் தான், தெளிவை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews