👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் காலிபணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடத்தப்பட்டு இரண்டாண்டுகளாகியும் அரசியல் தலையீடுகளால் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கூடுதல் பணி சுமை ஏற்படுவதுடன், சத்துணவு வழங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது.இம்மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 4361 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2018 டிச., 31 வரை 2857 அமைப்பாளர்கள், சமையலர்கள்,உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. பள்ளிகளில் சத்துணவு வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது.
கூடுதல் மையங்களை ஊழியர்கள் கவனிக்க வேண்டியிருப்பதால் பணிசுமையும் ஏற்படுகிறது.2016 செப்டம்பரில் 800க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2017 மே மாதம் மூன்று நாட்கள் நடந்தன. ஆனால் ஆளுங்கட்சியினர் தரப்பில் தனித்தனியாக தங்களுக்கு வேண்டியவர்களை காலிப்பணியிடங்களில் நியமிக்க சிபாரிசு பட்டியலை தந்தனர். இதனால் நியமனம் கிடப்பில் போடப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1000 அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களும் காலியாகவுள்ளன. இதற்கான நேர்காணலும் 2017 ல் நடத்தப்பட்டது. அதிலும் அரசியல் தலையீடுகளால் நியமனம் நடக்கவில்லை. தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால் பணியிடங்களை நிரப்ப முடியாது.
சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலர் சோலையன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் அரசியல் தலையீடு இருந்தாலும் கூட அம்மாவட்ட கலெக்டர் நேர் காணலில் கலந்து கொண்டவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டார். மதுரையில் நேர்காணலில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து நியமிக்க கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதுவரை அமைப்பாளர்கள், சமையலர்கள் நியமிக்கப்படவில்லை. ஒரு பள்ளியில் சமைத்து மற்றொரு பள்ளிக்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. ஊழியர் பற்றாக்குறையால் சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்