மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை: நாம் தமிழர் கட்சி புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 11, 2019

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை: நாம் தமிழர் கட்சி புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
data-ad-format="auto" data-full-width-responsive="true">
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அளவு குறைவாகவும், தெளிவில்லாமல் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி புதுச்சேரியில் புகார் தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநிலச் செயலர் சிவக்குமார், தொழிலாளர் நலச்சங்க மாநிலச் செயலர் ரமேஷ் ஆகியோர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ''மக்களவைத் தேர்தலிலும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரியில் எங்கள் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் தரப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படம், கட்சி சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது. புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் அளவை விட நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் சிறியதாகவும், தெளிவாக இல்லாமலும் உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீதும் தேர்தலின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்கினைச் செலுத்தி வரும் வாக்காளர்களின் சிந்தனையையும், மனோநிலையையும் சீர்குலைக்கும் விதமாக தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை வடிவமைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இதர மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைப் போன்று தெளிவாக நாம தமிழர் கட்சியின் சின்னத்தையும் தெளிவாக பொருத்திட வேண்டும். சரியான விளக்கத்தையும் தர வேண்டும்". இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு இயந்திரத்தில் என் சின்னத்தைத் தவிர மற்ற அனைத்து சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ‘பளிச்’ என்று வைத்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் சார்பில் மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுபாஷினியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ''வாக்கு இயந்திரத்தில் என் சின்னத்தைத் தவிர மற்ற அனைத்து சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ‘பளிச்’ என்று வைத்துள்ளது. நான் ஒரு சாதாரண ஆள். என்னைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? எப்படி விவசாயத்தையும் விவசாயிகளையும் மறைத்தார்களோ அதே போல என் சின்னத்தையும் மறைக்கிறார்கள். சென்ற முறை கிடைத்த மெழுகுவர்த்தி சின்னத்திலும் இவ்வாறே செய்தார்கள். காளை மாடு சின்னம் கேட்டேன். அது உயிருள்ள பொருள், தரமுடியாது என்றார்கள். அதற்குப் பதில் விவசாயி சின்னம் ஒதுக்கியுள்ளனர். அதற்கு என்ன அர்த்தம்? விவசாயி உயிருடன் இல்லை என்று அர்த்தம். எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று திமுகவினர் சொல்கிறார்கள். பாஜகவை இங்கே அழைத்து வந்தவர்களே அவர்கள்தான்''. இவ்வாறு சீமான் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews