சி.பி.எஸ்.இ., -- ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், கலை, அறிவியல் கல்லுாரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேரமுடியாமல், ஏராளமான மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இந்த பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், சி.பி.எஸ்.இ.,பாடப்பிரிவின் கீழ், பிளஸ் 2 தேர்வெழுதி, முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு, வழக்கத்தை காட்டிலும் முன்கூட்டியே, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை செயல்பாடுகள் துவங்கியுள்ளன. இம்மாத இறுதிக்குள் பெரும்பாலான கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு, போட்டி அதிகமாக காணப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பாதிப்பு:
தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது. இதனால், ஆண்டுதோறும் ஏராளமான மாணவ, மாணவியர் விரும்பிய கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளில் சேர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இம்மாணவர்கள் பலர், நல்ல மதிப்பெண் பெற்றும், மேனேஜ்மென்ட் இடஒதுக்கீட்டில், அதிக கட்டணம் செலுத்தி, சேரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து, கல்வியாளர் பேராசிரியர் வனிதா கூறியதாவது: தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநில பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வழக்கமாக, மே இரண்டாம் வாரம் வெளியாகும் .சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு,மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும். இதற்கு இடையில் உள்ள நாட்களில், கலை அறிவியல் கல்லுாரிகளில் முக்கிய பாடங்கள் அனைத்திலும், மாணவர் சேர்க்கை முடிந்துவிடும். இம்மாணவர்கள், மேனேஜ்மென்ட் இடஒதுக்கீடு அல்லது மீதமுள்ள துறைகளில் மட்டுமே சேர முடியும். நடப்பாண்டில், தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வழக்கத்துக்கு மாறாக, மிகவும் முன்கூட்டியே வெளியாகியுள்ளன. இதனால், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாணவர்கள் பாதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, கோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் கீதாராணியிடம் கேட்டபோது, சி.பி.எஸ்.இ., தலைவருக்கு, உயர்கல்வி மாணவர் சேர்க்கை சிக்கல் குறித்தும், தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிடவும், எப்போதும் பரிந்துரை அனுப்பி வருகிறோம். &'&'அனைத்து மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளுக்கு ஏற்ப, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளையும், மாற்றியமைக்க வேண்டும்,&'&' என்றார்.
நடப்பாண்டில், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே துவக்கி, முடித்துள்ளனர். மே முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளனர்; இதனால் இந்த முறை மாணவர் சேர்க்கையில் பாதிப்பு இருக்குமா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பதினொன்றாம் வகுப்புக்கும் பள்ளிகளில் இடம் இருக்காது!
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த மாதம்தான் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. ஆனால், இம்மாத இறுதியில் மாநில பாடத்திட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிறது. இதனால் முக்கிய பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புக்கான இடங்கள், அன்றைய தினமே நிரம்பி விடும். அடுத்த மாதம் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சீட் கிடைக்காமல், அங்குமிங்கும் பரிதாபமாக அலையும் நிலை ஏற்படும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U