குப்பை போடும் மக்கள், நிறுவனங்களிடம் கட்டணம்? மாநகராட்சி அதிரடி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 25, 2019

குப்பை போடும் மக்கள், நிறுவனங்களிடம் கட்டணம்? மாநகராட்சி அதிரடி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
குப்பையை உருவாக்குபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 2016-ம் ஆண்டு மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. அதன் படி உள்ளாட்சி அமைப்புகள் குப்பையை உருவாக்குபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கலாம் அறிவிக்கப்பட்டது. அதன் படி சென்னை மாநகராட்சி பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளிடமிருந்து குப்பை உருவாக்கப்பட்டதற்கான கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
தற்போது அதற்கான கட்டண முறைகளை வகுத்துள்ள சென்னை மாநகராட்சி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், ஷாப்பிங் மால்களுக்கு 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும், நட்சத்திர விடுதிகளுக்கு 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், ஏ வகுப்பு விடுதிகளுக்கு 1,000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையிலும், சாதரண விடுதிகளுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், திரை அரங்குகளுக்கு 750 முதல் 2000 ரூபாய் வரையிலும், அலுவலகங்களுக்கு 300 முதல் 3000 வரையிலும், தொழில் உரிமம் பெற்ற கடைகளுக்கு 200 முதல் 1000 வரையிலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 5000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலும், மருத்துவமனைகளுக்கு 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரையிலும், தனியார் பள்ளிகளில் 500 முதல் 3000 ரூபாய் வரையிலும் குப்பை உருவாக்கியதற்கான கட்டணமாக வசூலிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தேர்தல் விதிகள் தளர்த்திய பிறகு இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வாய்ப்புகள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews