👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நோக்கமே ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனியாக பயிற்சியாளர்களை நியமித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விளையாட்டில் மேம்படுத்த வேண்டும்.
இதற்காக தனியாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 28 விளையாட்டு விடுதிகள், 5 விளையாட்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனியாக பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் உணவு செலவாக ரூ.250 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் ஒரு நாள் உணவு ரூ.250க்கு சாப்பிடுவதில்லையாம். ஆனாலும் சில விளையாட்டு பிரிவு அதிகாரிகள் முழு தொகைக்கான கணக்கை போலியாக காட்டி அதனை அபேஸ் செய்து விடுகிறார்களாம்.
அதேபோல் அரசுக்கு சொந்தமான நீச்சல், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பயிற்சி பெறுவதற்கு வரும் வெளிநபர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு அதற்கான பில் கொடுக்காமல் அதையும் அபேஸ் செய்துவிடுகிறார்களாம். தமிழகத்தில் விடுதிகளில் தங்கி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,300 இடங்கள் உள்ளது. இதில் 1,167 மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயிற்சி பெ்றுகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு ரூ.2.94 லட்சம் செலவிடப்படுகிறது. அதேபோல் மாணவிகளுக்காக மொத்தம் 675 இடங்கள் உள்ளது. இதில் 596 மாணவிகளுக்கு ஒரு நாள் உணவுக்கு ரூ.250 வீதம் அனைவருக்கும் ரூ.1.68 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் பெரும்பாலான மாணவிகள் இந்த தொகைக்கு உணவு உண்பதில்லையாம். ஆனால் ஒதுக்கப்படும் முழு தொகையும் செலவிடப்படுவதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கப்படுகிறதாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U