👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சென்னை வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் என்ன படித்தால் அரசு உயர் அதிகாரி ஆகலாம் என்பதை விளக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தின.
நிகழ்ச்சியில் வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய நிறுவனர் எம்.சண்முகம் கூறும்போது, "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனத்துடன் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் கைக்கோர்த்திருக்கிறது. இங்கு தமிழகத்திலேயே முதல்முறையாக கல்லூரிப் படிப்புடன் மாணவிகளுக்கு ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வு போன்ற தேர்வுகளுக்கும் 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.எல்.அருண்பிரசாத், ஐஏஎஸ் அதிகாரி எ.மணிகண்டன், விவேகானந்தா மகளிர் கல்லூரி சேர்க்கைத் துறை அதிகாரி எஸ்.வரதராஜு ஆகியோர் பேசும்போது, "கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுக்கு தயாராவதன் மூலம் அரசு வேலை கிடைப்பது மிகவும் எளிதாக இருக்கும். மேலும் குறைந்த வயதிலேயே உயர் பதவிக்கு செல்லலாம்" என்று விளக்கினர்.
பயிற்சி வகுப்பில் சேரவும் மாதிரி வகுப்பில் பங்கேற்கவும் விரும்புவோர் 044-2626 5326, 9884421666 ஆகிய எண்களிலும்,
https://vetri.com/ என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய இயக்குநர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U