👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தெலங்கானாவில் வெளியிடப்பட்ட ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் குளறுபடியால் 17 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த ப்ளஸ் 2 தேர்வை சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். அத்தேர்வின் முடிவுகள் கடந்த 18ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மொத்த மதிப்பெண்ணான ஆயிரத்துக்கு, 750 முதல் 900 வரை பெற்ற மாணவ, மாணவிகள் பலரும் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. இப்படி சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணுக்கு கூடுதலாக பெற்றிருந்தும் தேர்ச்சி பெறவில்லை என முடிவு வெளியானதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதையடுத்து, அடுத்த நாளே 10 மாணவ, மாணவிகள் விஷமருந்தியும், தூக்கிட்டும், தீ வைத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்ட கொடுமை அரங்கேறியது. எனவே, பெற்றோர் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, கட்டணமின்றி விடைத்தாள் நகலைப் பெற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெலங்கானா அரசு அறிவித்தது. ஆனால், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில் பலரும், தாங்கள் சிறப்பாக தேர்வை எழுதியும் மிகக் குறைந்த மதிப்பெண்களே வழங்கப்பட்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளில் பிரதிநிதிகள் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து மனு அளித்தனர்.
கல்வித் துறை அமைச்சரை பணிநீக்கம் செய்ய வேண்டும், மறுமதிப்பீடு செய்து விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேலும் 7 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U