பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்த மதிப்பெண் எடுத்தாலும், பிளஸ் 1ல், கணிதம் முதல், தொழிற்கல்வி வரை, பல்வேறு வகை பாட பிரிவுகள் உள்ளன. அவற்றில் சேர விரும்பாத மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் படிப்புகள், எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில், 9.37 லட்சம் மாணவர்கள் பங்கேற்று, 8.92 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், ஐந்து பாடங்களுக்கு தலா, 100 மதிப்பெண் வீதம், 500 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. இதில், 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி.ஆனாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் உள்ள மதிப்பெண் மோகம் காரணமாக, 500க்கு, 495 வரை மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, மாணவர்கள் லட்சியமாக வைத்துள்ளனர். இந்த முறை, பொது தேர்வானது, 10 ஆண்டுகளுக்கு பின், 'ப்ளூ பிரின்ட்' என்ற, வினாத்தாள் கட்டமைப்பு முறை இன்றி நடத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 1, 'அட்மிஷன்' பாடத்தின் எந்த பகுதியில் இருந்தும், கேள்விகள் இடம் பெறும். எந்த வகை கேள்விகளானாலும், பாடங்களில் இருந்து புதிதாக கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இவற்றை மாணவர்கள் சமாளித்து, 95.2 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், 350 முதல், 450க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். சில பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு முடித்த நிலையில், அவரவர் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பிளஸ் 1 பாட பிரிவுகள் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கணிதம், அறிவியல் பாட பிரிவும், அதையடுத்து, அறிவியல், வணிக கணிதம், வணிகவியல், பொருளியல், வரலாறு, வேளாண் செயல்முறை அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள் என, வழங்கப்படுகின்றன.
பட்டப்படிப்பு என்ன? இவற்றில், மாணவர்கள் சேரும் முன், கல்லுாரிகளில் எந்த விதமான படிப்பை தேர்வு செய்ய போகிறோம் என்பதை, தற்போதே முடிவு செய்த பின், பிளஸ் 1 பாட பிரிவுகளை எடுக்க வேண்டும். மாறாக, அதிக மதிப்பெண் காரணமாக, கணித பாடம் எடுத்து விட்டு, பிளஸ் 2வுக்கு பின், பி.காம்., படிக்க முடியுமா என, யோசிப்பது கூடாது.அதேபோல, இன்ஜினியரிங் படிப்பில் சேர வேண்டும் என்றால், எந்த பாட பிரிவு தகுதியானது.க சி.ஏ., படிக்க எந்த பாட பிரிவை எடுக்க வேண்டும். வேளாண்மை, கால்நடை துறை படிப்புகளுக்கு, தற்போது, எந்த பாடபிரிவை எடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கேற்ற பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
பாலிடெக்னிக் வசதி மதிப்பெண் குறைவாக இருக்கிறது; பிளஸ் 1 படிக்க விருப்பமில்லை என்றால், அவர்கள், பாலிடெக்னிக்கில் டிப்ளமா படிக்கலாம். கல்வி உதவி தொகை, அரசின் சலுகை கட்டணம் போன்றவற்றுடன் படிக்கலாம். இந்த படிப்பை மூன்றாண்டுகள் முடித்த பின், அவர்கள் நேரடியாக இன்ஜினியரிங் படிப்பில், இரண்டாம் ஆண்டில் சேரலாம். மேலும், டிப்ளமா படிப்பை முடித்த பின், தொழிற்சாலை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியபடியே, பகுதி நேர, பி.இ., - பி.டெக்., படிப்பிலும் சேரலாம். இந்த வாய்ப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, மாணவர்கள் தங்களுக்கான பாட பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
பாடப்பிரிவு தேர்வில் கவனம் பத்தாம் வகுப்பில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், தங்களால் எதை படிக்க முடியும் என்பதை, மாணவர்கள் முடிவு செய்து, அதற்கேற்ப பாட பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும்.மருத்துவ படிப்புக்கு விருப்பம் இருந்தால், 'நீட்' தேர்வை எழுத, பிளஸ் 1ல் இருந்தே தயாராக வேண்டும். அதற்கான பயிற்சி பெறுவது குறித்தும், இப்போதே முடிவு செய்ய வேண்டும்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றால், அதற்கு, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கும் இப்போதே முடிவு செய்து, பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். தொழிற்கல்வி பாட பிரிவு எடுத்தால், பிளஸ் 2வுக்கு பின், இன்ஜினியிரிங்கில் சில பாடப்பிரிவுகள் மட்டுமே படிக்க முடியும். அதுகுறித்தும், மாணவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews