👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து, கடந்த இருதினங்களாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதனால், தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அவசர, அவசரமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் திடீர் அறிவிப்பு செல்போன் எஸ்எம்எஸ் மூலம் வெளியானது. அதில், அனைத்து மாவட்டத்திற்கும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் 10ம் தேதி (நேற்று) மாலைக்குள் விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பல்வேறு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இரவோடு, இரவாக லேப்டாப்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. உடனடியாக பள்ளிக்கு வந்து லேப்டாப் பெற்றுக் கொள்ளும்படி, மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், தேர்தல் தேதி நேற்று மாலையில் வெளியானது. ஆனால், ஏற்கனவே கிடைத்த உத்தரவுப்படி பள்ளிகளுக்கு மாணவர்கள், அவசர, அவசரமாக சென்று லேப்டாப்பை பெற்றுக் கொண்டனர். ஒருசில பள்ளிகளில் லேப்டாப் வந்து சேராததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில், நேற்று மாலை வரை பள்ளி வளாகங்களிலேயே காத்திருந்தனர். இதனால் மாணவர்களும், அவர்களை அழைத்து வந்த பெற்றோர்களும் கடும் அவதியடைந்தனர். இதுபற்றி, மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கான லேப்டாப் குறித்து கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, தேர்தல் அறிவிப்பு என்ற ஒரே காரணத்திற்காக அவசர, அவசரமாக லேப்டாப் வழங்குகின்றனர். தற்போது நடந்து வரும் பொதுத்ேதர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்களை அலைகழித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்