வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..... மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..... மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது; அவகாசம் நீட்டிக்கப்படாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரி ஜிஎஸ்டி அலுவலகங்களுக்கு இன்று வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன் மற்றும் 2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரையில் ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் உடனே ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயமாகும். இன்றைய தினத்தை தவற விட்டு விட்டு வருத்தப்பட வேண்டாம். வருமான வரி ரிட்டன் மற்றும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய வசதியாக விடுமுறை தினமான இன்றும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்கள் செயல்படும் என்று மத்திய மறைமுக வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கை எட்ட இன்னும் 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதால் மார்ச் 31 கடைசி நாளான இன்றும் விடுமுறை நாளில் அலுவலகத்தை திறந்து வைத்து வருமான வரித்துறை தீயாக வரி வசூல் செய்கிறது.
இலக்கை எட்ட தேவை 2 லட்சம் கோடி: நடப்பு 2018-19 நிதியாண்டின் வரி வசூல் சுமார் 12 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று திருத்தப்பட்ட பட்ஜெட்டில் (Revised Budget) மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் 27ஆம் தேதி வரையிலும் சுமார் 10.29 லட்சம் கோடியே வசூலாகியிருந்தது. இன்னும் 4 நாட்களுக்குள் 2 லட்சம் கோடி ரூபாயை எப்படி வசூலிக்க முடியும் என்ற திகைப்பில் வருமான வரித்துறையினர் இருந்தனர்.
சனி ஞாயிறு லீவு கிடையாது: வருமான வரி வசூல் இலக்கான 2 லட்சம் கோடி ரூபாயை எட்ட 4 நாட்கள் இருந்தாலும் மார்ச் 30 மற்றும் 31 தேதிகள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இலக்கை எட்ட முடியாது என வருமான வரித்துறை அதிகாரிகள் பீதியில் இருந்தனர். இவர்களின் மனநிலையை அறிந்தோ என்னவோ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் வரி வசூலை எட்ட முயற்சிக்க வேண்டும் என்றும் மத்திய மறைமுக வரிகள் ஆணையம் (Central Board of Indirect Taxes) அறிவித்தது.
ஜிஎஸ்டி இலக்கு 11.47 லட்சம் கோடி: ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கான 11.47 லட்சம் கோடியை எட்ட இன்னும் 77000 கோடி ரூபாய் தேவைப்படுவதால் எப்படியாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கண்டிப்பாக எட்டவேண்டும் என்று மத்திய அரசு ஜிஎஸ்டி ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே ஜஎஸ்டி வசூல் இலக்கை எட்ட ஜஎஸ்டி அதிகாரிகளும் சுற்றிச் சுழன்று தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.
RTGS, NEFT மூலம் வரி கட்டலாம்: இன்று அரசு அலுவலகங்களின் பணப்பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் செயல்படுகிறது. எனவே ஆன்லைனில் வரி செலுத்த விரும்புவோர் ஆர்டிஜிஎஸ்(RTGS) மற்றும் நெஃப்ட்(NEFT) மூலம் தங்களின் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை செலுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்களில் RTGS மற்றும் NEFT மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க: கடந்த 2016-17ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன் மற்றும் 2017-18ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை (அபராதத்துடன்) இதுவரையிலும் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக ரிட்டன் தாக்கல் செய்யவேண்டியது அவசியம். முந்தைய ஆண்டுக்கான ரிட்டன்களை இன்றுக்குள் தாக்கல் செய்யாவிட்டால் வரும் நிதியாண்டில் கண்டிப்பாக 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் மாத சம்பளதாரர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய அனைவரும், ஆண்டு தோறும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். காப்பீடு, கல்விக் கட்டணம் போன்றவை செலுத்தி, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வருவாய் இருந்தாலும், மாத சம்பளத்தில், வருமான வரி பிடித்தம் செய்திருந்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.
இந்நிலையில், 2017---- - 18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல், இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோர், வரும் ஆண்டுகளில், கணக்கு தாக்கல் செய்ய முடியாது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது. இதே போல, 2016 - 17ம் நிதி ஆண்டுக்கான, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், இன்றே கடைசி நாள். கடந்த ஆண்டு, பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தை கணக்கிடும் போது, இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews