👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இரண்டாவது நாளாக நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், உலகளாவிய வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கை நிறைய சம்பாதிக்கலாம்அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் பி.திருநாவுக்கரசு பேசியதாவது: மாணவர்கள் தாங்கள் படைப்பாளியாக திகழ வேண்டும் என விரும்புவதே சிறந்தது. அப்படிபட்டவர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறது அனிமேஷன் உலகம். இன்றைக்கு அனிமேஷன் இல்லாத துறைகள் இல்லை. குறிப்பாக திரைத்துறை, &'டிவி&' நிகழ்ச்சிகளுக்கு அனிமேஷன் படித்தவர்களின் தேவை அதிகம். இத்துறையை தேர்வு செய்தால் உலகளாவிய வேலை வாய்ப்புகளை பெற முடியும். வீட்டில் இருந்தவாறே கைநிறைய சம்பாதிக்கலாம்.&'கிரியேட்டிவிட்டி&' ஆற்றல்தான் இத்துறைக்கு மாணவர்கள் கொடுக்க வேண்டிய மூலதனம்.
அனிமேஷனில் 2டி, 3டி அனிமேஷன் என பல வகை படிப்புகள் உள்ளன. ஆனால் இவற்றை பட்டப்படிப்பாக படிப்பது தான் சிறந்தது. சான்றிதழுக்காக குறுகிய கால படிப்புகளை தேர்வு செய்து படித்தால் முழு பலனை அனுபவிக்க முடியாது. விளம்பரம், நிறுவனங்களின் லோகோ, லேஅவுட் தயாரிப்பது போன்ற வேலைகளை செய்ய அனிமேஷன் படித்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். அனிமேஷன் படித்தவர்கள் தேசம் கடந்து பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்தியாவில் புனே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன, என்றார்.எட்டிப்பிடிக்கும் துாரத்தில் ஐ.ஏ.எஸ்.,அரசு வேலைகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிப்புகள் குறித்து சென்னை சன் அகாடமி இணை இயக்குனர் நித்யா பேசியதாவது: படித்தாலே வேலை கிடைத்துவிடும். பணம் சம்பாதிக்க துவங்கிவிடலாம் என தப்புக்கணக்கு போடக்கூடாது.
படிப்புக்குப் பிந்தைய தொடர் தேடுதல், விடா முயற்சி, திறன் மேம்பாடு தான் வாழ்வில் வெற்றியை பெற்றுத்தரும். சிலர் பணம் சம்பாதிக்க விரும்பலாம். சிலர் சேவை செய்ய ஆசைப்படலாம். ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொன்று கிடைக்கும். ஆனால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகிவிட்டால் எல்லாம் ஒருங்கே கிடைத்துவிடும். கணிசமான தொகையை ஊதியமாக பெறுவதோடு சேவையும் செய்யலாம். புகழும், மரியாதையும் கிடைக்கும். சமூகத்தின் தனி அடையாளமாக ஜொலிக்கலாம்.யு.பி.எஸ்.சி., தேர்வு முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளை கொண்டது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கனவு நனவாக இத்தேர்வுகளில் வெற்றி பெறுவது அவசியம். இதற்கு உணர்வுப்பூர்வமான செயல்பாடுகள் தேவையல்ல. அறிவுப்பூர்வமாக செயல்படுவதே அவசியம். சமயோஜித சிந்தனை வேண்டும். திறமையாக செயல்பட்டால் ஐ.ஏ.எஸ்., எட்டிப்பிடிக்கும் துாரம் தான்.
இதற்கு கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. உறுதியாக உழைத்தால் நீங்களும் ஐ.ஏ.எஸ்.,தான், என்றார்.80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள்மேற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு குறித்து டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் பைன்டிங் அமைப்பின் சி.இ.ஓ., நெடுஞ்செழியன் பேசியதாவது:என்ன படிக்கிறோம் என்பதை விட எந்த கல்லுாரியில் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நன்றாக படிக்கும் திறமையான மாணவர்கள் கூட சில கல்லுாரிகளை தேர்வு செய்து வாழ்வில் தோற்றதுண்டு. பிறந்த ஊரிலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். உலகம் பெரியது. எந்த மாநிலத்துக்கும், எந்த நாட்டுக்கும் சென்று படிக்க தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் படிப்பை முடித்த கையோடு கை நிறைய சம்பளம் தரும் துறையில் வேலைக்கு சேர முடியும்.ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை குறிவைத்து படிக்க வேண்டும். பல்வேறு படிப்புகள், அவற்றுக்கான கல்லுாரிகள் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை.
இந்தியாவில் 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடக்கின்றன. சில தேர்வுகள் பிளஸ் 2 படிக்கும் போதே துவங்கி விடும். தற்போது பல்வேறு படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இப்படிப்புகளை ஆராய்ந்து தங்களுக்கு ஏற்றதை கண்டறிந்து, நுழைவுத்தேர்வு எழுத மாணவர்கள் முன்வர வேண்டும். இதில் வெற்றி பெறுவதன் மூலம் தரமான கல்லுாரிகளில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும். எந்த படிப்புக்கும் எதிர்காலம் உண்டு. ஆனால் அது எங்கே படிக்கிறோம் என்பதே பொறுத்தே அமைகிறது, என்றார்.அறிவியல் பாடங்களே அடிப்படை&'அறிவியல்&' குறித்து சென்னை எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா கல்லுாரி ஓய்வு பேராசிரியை லட்சுமி பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும் இயந்திரங்களால் செய்யும் மனிதர்களால் முடியாத ஏழரை கோடி வேலைகள் பழசாகி மறைகின்றன. அதேநேரம் 3.3 கோடி வேலைகள் புதிகாக தோன்றுகின்றன.
இந்த வேலைகளுக்கு அறிவியல் தான் அடிப்படை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதர்கள் மென்திறன்கள் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அறிவியலில் பல்வேறு துறைகள் இருந்தாலும் அடிப்படை அறிவியலான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் முக்கியமானவை. இவை தான் பொறியில் பாடங்களுக்கு அடிப்படை. பல படிப்புகள் கல்வி உதவித் தொகை பெற்று படிக்கலாம். இப்படிப்பு முடித்தால் ஆசிரியர், ஆராய்ச்சி, தொழில்முனைவோர் ஆகிய பணிகளுக்கு செல்லலாம். அறிவியல் படிப்பு முடித்தால் டி.என்.பி.எஸ்.சி., பேங்கிங் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம். என்ன படிக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றார்.&'டிஜிட்டல் மார்க்கெட்டிங், இ காமர்ஸ், சைபர் பாதுகாப்பு&' குறித்து பிசினஸ் பிளாக்கிங் நிறுவனர் மற்றும் பேராசிரியர் கிருபா சங்கர் பேசியதாவது:உலக அளவில் டிஜிட்டல் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறைக்கு கடின உழைப்பு தேவையில்லை.
ஸ்மார்ட் ஒர்க் தான் வெற்றியை தரும். ஆயிரக்கணக்கான யூ டியூப்கள் உள்ளன. கிரியேட்டிவ் ஆகவும், ஸ்மார்ட் ஆகவும் யோசித்தால் வீட்டில் இருந்தே உலக அளவில் தொழில் நடத்தி சம்பாதிக்கலாம். இன்றைய கார்ப்பரேட் பணிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இங்கு அறிவுசார் திறமை தேவையில்லை. சாமர்த்தியமாக யோசித்து முடிவு எடுக்கும் திறமை தான் தேவைப்படுகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தங்கள் திறமைகள், செயல்பாடுகளை வித்தியாசமாக பதிவேற்றம் செய்யும் இளைஞர்கள் பலர் சாதித்து வருகின்றனர். வளர்த்து வரும் இத்துறையில் நினைத்து பார்க்க முடியாத அளவில் புதிய புதிய வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கின்றன, என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்