எளிமையான, எதிர்பார்த்த வினாக்கள் உயிரியல் தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2019

எளிமையான, எதிர்பார்த்த வினாக்கள் உயிரியல் தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு உயிரியல் பாட வினாக்கள் எளிமையாகவும், எதிர்பார்த்ததாகவும் இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர் கூறினர். என்.லோகேஷ், கே.வி.எஸ்.,மேல்நிலை பள்ளி, விருதுநகர்: அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. நிச்சயம் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவேன். வழக்கமாக 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருக்கும். ஆனால் இம்முறை துணை பிரிவுகளாக 3 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை இணைத்து 5 மதிப்பெண் கேள்வியாக கேட்டிருந்தனர்.
தாவரவியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் எளிதாக இருந்தது.அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறேன். பி.சினேகா, ஜேசீஸ் மெட்ரிக்.,பள்ளி, சிவகாசி: தேர்வு எளிதாகவே இருந்தது. ஒரு மார்க் கேள்விகள் பரவாயில்லை. தாவரவியல் பாடத்தில் உள்ள ஒரு மார்க், 5 மார்க் உள்ளிட்ட அனைத்து கேள்விகளும் எளிதாகவே இருந்தது. விலங்கியல் பாடத்தில் ஒரே ஒரு 5 மார்க் கேள்வி 'கிரியேடிவாக' இருந்தாலும் எளிமையாகத்தான் இருந்தது. புரிந்து படித்திருந்தால் எளிதில் சென்டம் வாங்கி விடலாம். நேரம் போதுமானதாகவே இருந்தது. மொத்தத்தில் உயிரியல் எளிமையாக இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி, நவபாரத் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்: உயிரியல், தாவரவியல் மூன்று மார்க் பிரிவு கட்டாய கேள்வி ஒன்றில் கிரியேட்டிவாக கேட்டுள்ளனர். இது எதிர்பாராத ஒன்று. விலங்கியல் பிரிவில் 1, 2 மார்க் கேள்விகளை யோசித்து எழுதும்படி இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு வினாத்தாளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக எளிதாக இருந்தது. கவிதா, உயிரியல் ஆசிரியர், ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்: முந்தைய ஆண்டுகளில் உள்ள கேள்வித்தாள்களில் இருந்தே பெரும்பான்மை கேள்விகள் கேட்கபட்டிருந்தன. வழக்கமாக உயிரியல் வினாத்தாளில் மறைமுக கேள்விகள் அதிகமாக இருக்கும். இம்முறை அனைத்து கேள்விகளுமே நேரடி கேள்விகளாக இருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண முடிந்தது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews