👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது என்று மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்
மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுகளில் தேர்தலை நடத்தக்கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரியுமான பிரகாஷ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரிகள், இணை, துணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில் வாக்குச் சாவடி மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர் பட்டியல் விவரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விவாதித்தார்.
பறக்கும் படை சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே கூட்டத்திற்கு பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் 38.2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 3754 வாக்கு சாவடிகள் உள்ளதாக கூறினார்.
மேலும், சமூகவலைதளங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்த அவர், பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் சென்னையில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.
சென்னையில் 38.2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 3754 வாக்கு சாவடிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகவலைதளங்கள் கண்காணிக்கப்படும், பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது, சென்னையில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்