புதிய தவளை இனம்: டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் கண்டுபிடிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 27, 2019

புதிய தவளை இனம்: டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் கண்டுபிடிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வரும் சோனாலி கார்க் எனும் மாணவியும், அவரது ஆய்வு வழிகாட்டி சத்யபாமா தாஸ் பிஜு என்பவரும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மழையின் ஒரு பகுதியான வயநாட்டில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். மிஷ்டிசெல்ஸ் (Mysticellus) எனும் புது வகை தவளை இனம் ஒன்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனப்பெருக்க காலத்தில் மட்டுமே வெளிவரும் இவை மற்ற நேரங்களில் ரகசிய வாழ்வு வாழ்கின்றன. இவற்றின் வாய்ப் பகுதி மிகக் குறுகியதாக இருக்கும். எனவேதான், இதற்கு மர்மமான - குறுகிய வாய் உடைய தவளை(Mysterious Narrow-mouthed Frog) என்று பொதுப்பெயர் சூட்டியுள்ளனர். 2013ம் ஆண்டு சோனாலி கார்க் தனது கள ஆய்வின்போது வயநாட்டில் உள்ள ஒரு குட்டையில் வித்தியாசமான தலைப்பிரட்டைகளைப் பார்த்திருக்கிறார். அவற்றை ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்து பார்த்தபோது அதன் ஜீன்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள தவளை இனங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு புதுவகை இனமாக இருந்துள்ளது. எனவே அந்த இனத்தின் முதிர்ந்த தவளையினைச் சுமார் இரண்டு வருடங்கள் தேடிய பின்னர் 2015ம் வருடம் தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஒரு குட்டையைச் சுற்றியிருந்த புல்வெளியில் 200க்கும் மேற்பட்ட தவளைகளைப் பார்த்துள்ளார்.
‘‘முதன்முதலில் 2013ல் இதன் தலைப்பிரட்டையைப் பார்த்தேன். பிறகு இரண்டு வருடங்கள் தேடியதில் 2015ம் ஆண்டுதான் அந்த தலைப்பிரட்டைக்கான முதிர்ந்த தவளையைப் பார்த்தோம், அதன்பின்னும் நான்கு ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகுதான் அந்த தவளை இனத்தை கண்டுபிடிக்க முடிந்தது’’ என்கிறார் சோனாலி கார்க். புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் இருவாழ்விகள்(Amphibians), அதாவது, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளை, தேரை இனங்களின் பட்டியலில் புதியதாகச் சேர்ந்துள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews