அமெரிக்காவில் தேர்வெழுத நெல்லை அரசு பள்ளி மாணவி தகுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

அமெரிக்காவில் தேர்வெழுத நெல்லை அரசு பள்ளி மாணவி தகுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோ 4 குரு என்ற இணையவழி தனியார் கல்வி நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அப்துல்கலாம் கல்பனா சாவ்லா, சுனில் வில்லியம்ஸ் குறித்து வரலாற்று கட்டுரை போட்டியினை இணையவழி வாயிலாக நடத்தியது இந்திய அளவில் 2000ம் மாணவ மாணவிகளும் தமிழகத்தில் 200 பேரும் பங்கேற்றனர். 4 பக்கம் கொண்ட இக்கட்டுரை போட்டியை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கபட்டது இதில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ், கேடயம், நிதியுதவி வழங்கப்பட்டது.
நெல்லையில் தேர்வு செய்யப்பட்ட பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி ரட்சயசெல்வி தகுதி தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு தலைமை ஆசிரியை தங்கதாய் கேடயம், சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா முதன்மை கல்வி அலுவலர் பாலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அபுபக்கர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவி அமெரிக்காவின் நாசா கென்னடி ஸ்பேஸ் சென்டருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இண்டர்நேஷனல் ஸ்பேஸ் சயின்ஸ் கான்பரன்ஸ் சுற்றுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 10 நாட்கள் அமெரிக்காவை சுற்றி பார்க்கலாம் தொடர்ந்து அங்கு நடத்தப்படும் இறுதித் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கான இன்ஜினியரிங் அல்லது மருத்துவ படிப்பிற்கான முழு செலவு தொகையினையும் கோ4 குரு நிறுவனம் செய்து கொடுக்கிறது தவிர வெற்றி பெரும் மாணவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு தொகையும் வழங்குகிறது . இத்தகுதி தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்ற பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியை அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர். ரட்சியசெல்வியின் தந்தை பேட்டை வி.வி.கே தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் இவர் பேட்டை காவல் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா கணவருக்கு வணிகத்தில் உதவிபுரிந்து வருகிறார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews