புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் கடும்: உயர்வு போராட்டத்தில் குதித்தனர் மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் கடும்: உயர்வு போராட்டத்தில் குதித்தனர் மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்சிஏ, எம்எஸ்சி, எம்பிஏ தொடங்கி பல பாடங்களில் கல்விக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். துணைவேந்தரின் செயல்பாட்டை கண்டித்து 7க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன் மாணவர் அமைப்பினர் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் கவுன்சிலின் தலைவர் ஜூனைத் நாசர் கூறுகையில், "எம்சிஏ கட்டணம் 225 சதவீதம், எம்எஸ்சி, எம்டெக் கணினி அறிவியல் கட்டணம் 182 சதவீதம், எம்பிஏ 125 சதவீதம், பிஎச்டி பிரிவு 56 சதவீதம், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி பாடத்துக்கு 51 சதவீதம், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்ஏ பாடத்துக்கு 44 சதவீதம், எம்காம், எம்ஏ எக்னாமிக்ஸ், எம்எஸ்டபுள்யூ பாடத்துக்கு 40 சதவீதம், அனைத்து எம்எஸ்சி, எம்டெக் (கணினி அறிவியல் தவிர்த்து) பிரிவுகளுக்கு 38 சதவீதம் என பல பாடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சராசரியாக 83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை விட புதுச்சேரி பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி கட்டணம் உயர்வாக இருப்பது சரியா என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "ரூ. 17 ஆயிரத்துக்குள் இருந்த செமஸ்டர் கட்டணம் ரூ. 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது ஏழை எளிய மாணவர்களை பெரிதும் பாதிக்கும். சில படிப்புகளில் கட்டணம் ஆயிரங்களிலிருந்து மாறி லட்சங்களை தொட்டுள்ளது. இனி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளை படிக்க எங்களுக்கு வாய்ப்பில்லை. அதை விட கொடுமை விண்ணப்பங்களின் விலையே ரூ. 600 என்றால் நாங்கள் என்ன செய்வது" என்கின்றனர் கோபமாக. இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ், அம்பேத்கர் மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, அம்பேத்கர் - பெரியார் மாணவர் கழகம் உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றன.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews