இந்தியாவில் 56 சதவீத இளைஞர்கள் ஆன்லைனில்தான் செய்தி படிக்கிறார்கள்: ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

இந்தியாவில் 56 சதவீத இளைஞர்கள் ஆன்லைனில்தான் செய்தி படிக்கிறார்கள்: ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில் (ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்), இந்தியாவில் இணையவழி செய்திகள் குறித்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டு அதுபற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற (இடமிருந்து) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம், ஆசிய இதழியல் கல்லூரி தலைவர் சசிகுமார், ராய்டர்ஸ் மையத்தின் இயக்குனர் ராஸ்மஸ் லீஸ் நீல்சன், அவுட்லுக் இதழின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்.படம்: ரவீந்திரன் இந்தியாவில் 56 சதவீத இளைஞர் கள் ஆன்லைனில்தான் செய்தி களை படிக்கிறார்கள் என்று ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ராய்டர்ஸ் இதழியல் துறை இந்தியாவில் இணையவழி செய்திகள் தொடர்பான ஆய்வை ஜனவரி மாதம் மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையை, சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில் (ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராய்டர்ஸ் மையத்தின் இயக்குனர் ராஸ்மஸ் லீஸ் நீல்சன் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இணையவழி மற்றும் சமூக வலை தளங்களில் வெளியிடப்படும் செய்திகள், வாசகர்கள் செய்தி களை பயன்படுத்தும் விதம் குறித்து இந்தியா முழுவதும் 1,013 ஆங்கில வாசகர்களிடம் ஆன்லை னில் கருத்துகள் கேட்கப்பட்டன. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் இணையதளம் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் படிப் போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் செய்திகளை படிப்பவர்கள் அரசியல்ரீதியாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்து கிறார்கள். சமூக வலைதளங்களில் செய்திகளை படிக்கும் அதே வேளையில் அச்செய்திகள் மீதான நம்பகத்தன்மை அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.
தூர்தர்ஷன் மீது நம்பிக்கை: 31 சதவீதம் பேர் செய்திகளை படிக்க ஸ்மார்ட்போன், டேப்லட் போன்ற சாதனங்களை பயன் படுத்துகிறார்கள். 80 சதவீதம் பேர் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் செய்தி களை தேடுகிறார்கள். செய்திக ளின் உண்மைத் தன்மையை பொறுத்தவரையில் தூர்தர்ஷன் செய்திகளையே அதிகம் நம்பு கிறார்கள். 35 வயதுக்கு உட்பட்ட 56 சதவீத இளைஞர்களும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும் ஆன்லைனில் செய்திகளை படிக்கிறார்கள். எதிர்காலத்தில் ஆன்லைன் செய்தி களின் பயன்பாடு மிக அதிக அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ஆய் வறிக்கை தொடர்பான குழு விவாதம் நடைபெற்றது. இதில், ராஸ்மஸ் லீஸ் நீல்சன், ‘தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், ‘அவுட்லுக்’ இதழின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத், ஆசிய இதழியல் கல்லூரி தலைவர் சசிகுமார் ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பொறுப்பேற்க செய்ய வேண்டும்: இந்து என்.ராம் பேசும்போது, ‘‘சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு அந்த நிறுவனங்களை வெளியீட் டாளர்களாக கருதி செய்திகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். தவறாக செய்திகள் வெளியிடப்படும் பட்சத்தில் நடு நிலையோடு சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுவது சர்வ சாதாரண மாகிவிட்டது. இந்த தவறான போக்கு, தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது" என்றார். முன்னதாக, ‘தி இந்து' நாளிதழின் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் அறிமுகவுரை நிகழ்த்தி னார். இந்நிகழ்ச்சியில் பத்திரிகை யாளர்கள், ஆசிய இதழியல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews