இந்தியாவுக்கு 2,000 எம்பிக்களா..? தமிழக உரிமையைக் காக்கும் அந்த சட்டத் திருத்தங்கள் எது..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

இந்தியாவுக்கு 2,000 எம்பிக்களா..? தமிழக உரிமையைக் காக்கும் அந்த சட்டத் திருத்தங்கள் எது..?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மக்களவை உறுப்பினர்கள் என்பவர்கள் யார். தங்கள் மாநில மக்களுக்காக இந்திய பாராளுமன்றத்தின் பேசி தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய உறுப்பினர்கள். இன்று இந்தியாவில் இருக்கும் ஒரு மக்களவை உறுப்பினர் சராசரியாக 16.5 லட்சம் இந்திய வாக்காளர்கள் சார்பாக மக்களவையில் பேச வேண்டி இருக்கிறது. 1951 - 52-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஒரு மக்களவை உறுப்பினர் சராசரியாக வெறும் நான்கு லட்சம் வாக்காளர்களுக்கு மட்டுமே பிரதிநிதியாக இருந்தார். ஆனால் இன்று நான்கு மடங்கு அதிக வாக்காளர்களுக்கு பிரதிநிதியாக இருக்கிறார்கள். 1947க்கே போக ஆக 2019-ல், இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் 1951 - 52-ஐப் போல நான்கு லட்சம் பேருக்கு ஒரு மக்களவை எம்பி என்றால் கூட இன்று சுமாராக 2000 எம்பிக்கள் தேவை.
எண்ணிக்கை அதிகரிக்கவில்லை: 1977-ம் ஆண்டு இந்திய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 + 2 ஆக உயர்த்தியது தான். அதன் பின் இது நாள் வரை மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. லோக் சபா எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா..? சட்டம் என்ன சொல்கிறது: இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 81-ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவையில் இடம் ஒதுக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி இருப்பது போல் அமைக்க வேண்டும் என்றும் சொல்கிறது. சுருக்கமாக மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்கள் இருக்க வேண்டும் என்கிறது.
உதாரணமாக இப்போது ராஜஸ்தானில் உள்ள ஒரு மக்களவை உறுப்பினர் சுமாராக 30 லட்சம் வாக்காளர்களுக்கு பிரதிநிதியாக மக்களவைக்கு வருகிறார். ஆனால் தமிழகமோ வெறும் 17.5 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த பாரபட்சத்தை மாற்றி அமைக்கும் சட்டமே சொல்கிறது. எடுத்துக்காட்டாக இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என்றால் அதே போல் இந்தியா முழுமைக்கும் மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்படும்: இப்போது ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் 30 லட்சம் பேருக்கு ஒரு மக்களவை உறுப்பினர் என்று வைத்தால், இந்த 2019 மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்துக்கு 80-ல் இருந்து 93 சீட்டுக்கள், பீஹாருக்கு 40-ல் இருந்து 44 சீட்டுக்கள், ராஜஸ்தானுக்கு 25-ல் இருந்து 31 சீட்டுகள் என அதிகரிக்கும்.
தமிழகத்துக்கு அடி: அவர்களுக்கு நேர் மாறாக தமிழகம், கேரளம் போன்ற பொருளாதார ரீதியில் மேம்பட்ட மாநிலங்களில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறையும். அதே 30 லட்சம் பேருக்கு ஒரு மக்களவை உறுப்பினர் என்றால் தமிழகத்துக்கு 39-ல் இருந்து 29 சீட்டாகவும், கேரளத்துக்கு 20-ல் இருந்து 15 சீட்டாகவும் குறையும். ஆக தென் இந்தியாவின் ஆதிக்கம் பாராளுமன்றத்தில் இன்னும் குறையும். குறைந்தால் தமிழகம் இல்லாமல் வட மாநிலங்களை வைத்துக் கொண்டே இப்போது ஆட்சி நடத்துவது போல இன்னும் எளிதாக நடத்தலாம். தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் ஆதரவே ஹிந்தி பேசும் தேசிய கட்சிகளுக்கு தேவை இருக்காது. பிரதிநிதித்துவம்: ஏற்கனவே தமிழகம் கடனில் தான் மிதக்கிறது. இப்போது ஜி.எஸ்.டி தவிர வேறு எந்த ஒரு விஷயமும் மத்தியில் இருந்து நமக்கு கிடைப்பதில்லை. இன்னும் இப்படி பிரதிநிதித்துவம் குறைந்தால் தமிழகம் சுடுகாடே ஆனால் கூட பிரதமர்கள் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆனால் இந்த மாற்றத்துக்கு இரண்டு சட்ட திருத்தங்கள் முட்டுக் கட்டை போட்டு தமிழகத்தைக் காக்கின்றன.
இன்னொரு சட்டம்: 1976-ம் ஆண்டு கொண்டு வந்த 42-வது சட்டத் திருத்தத்தின் படி 1971 சென்செஸ் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) அடிப்படையிலேயே மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும். இந்த திருத்தம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனக் கொண்டு வந்தார்கள். மீண்டும் 2001-ம் ஆண்டு கொண்டு வந்த 84-வது சட்டத் திருத்தத்தில் மீண்டும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என கொண்டு வந்துவிட்டார்கள். குடும்ப கட்டுப்பாடு: மேலே சொன்ன 84-வது சட்ட திருத்தத்துக்கு முக்கிய காரணம், குடும்ப கட்டுப்பாடு. 1970 மற்றும் 1980-களில் இந்தியாவில் பரவாலாக கொண்டு வரப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டை தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதால் தான் 2000-ம் ஆண்டு வாக்கில் மக்கள் தொகை குறைந்திருக்கிறது. இப்படி குடும்ப கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் வஞ்சிக்கப்படக் கூடாது என்பதால் தான் 2026 வரை லோக் சபா எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வரக் கூடாது என திருத்தம் கொண்டு வந்தார்களாம். சரி இந்தியாவை விடுங்கள், உலக நாடுகளில் எத்தனை மக்களுக்கு ஒரு எம்பி இருக்கிறார்..?
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews