2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்திசெய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!தி செய்யும் தகவல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 03, 2019

2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்திசெய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!தி செய்யும் தகவல்கள்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி

வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் தகவல்கள்

Sunday, February 3, 2019




இந்த மாதம் செலுத்த போகும்
*************************
வருமான வரித்தகவல்கள்
2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

மேலும் 80U படி - 75,000/-* (40%க்கு மேல்) 1,25,000/- (80%க்கு மேல்) அரசு மருத்துவரின் மருத்துவ சான்றின் அடிப்படையில் கழித்துக் கொள்ளளாம்.

housing loan - வட்டி அதிகபட்சமாக *Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.
housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. *(LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்). 80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவதும் 80Eல் கழித்துக் கொள்ளலாம். நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் *நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.
வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
10,00,001 - மேல்       : 30%

வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம்* செய்ய வேண்டும்.Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/-  ஐ 87A ல் கழித்துக் கொள்ளலாம்.Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews