குரூப் 2 மெயின் தேர்வு 1,199 பதவிக்கு 14,000 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் 51 மையங்களில் நடந்தது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 24, 2019

குரூப் 2 மெயின் தேர்வு 1,199 பதவிக்கு 14,000 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் 51 மையங்களில் நடந்தது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
குரூப் 2 பதவிக்கான மெயின் தேர்வு நேற்று நடந்தது. 1,199 பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 14 ஆயிரம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி பணியில் 30 இடம், சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி- 12,
வேலை வாய்ப்புதுறை இளநிலை அதிகாரி-16, சிறைத்துறை பயிற்சி அதிகாரி -18, தொழில்துறை உதவி ஆய்வாளர்- 26. சப்-ரிஜிஸ்டார் (கிரேடு 2)- 73, நகராட்சி ஆணையர் (கிரேடு 2)- 6, உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)- 16, உதவி பிரிவு அதிகாரி(நிதித்துறை)- 16.தணிக்கை ஆய்வாளர் (இந்து சமய அறநிலையத்துறை)- 31, மூத்த ஆய்வாளர்(பால்வளத்துறை)- 48, கைத்தறி துறை இன்ஸ்பெக்டர்- 23, மூத்த ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை)- 599 உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,199 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி முதல்நிலை எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 14,797 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 15 மாவட்டங்களில் 51 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு ஆர்வமுடன் வந்திருந்தனர். சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது .தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். மேலும் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ள ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்தே மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். தொடர்ந்து மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews