👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
விதிப்படி இல்லாமல் LKG, UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை எவ்வாறு பணி அமர்த்துகிறீர்கள் : நீதிபதி கேள்வி
இடைநிலை ஆசிரியர்களை LKG, UKG வகுப்புகளில் பணி அமர்த்தும் அரசாணை ஜனவரி 30ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடைக் கோரி மனு
தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில், தொடக்கக்கல்வித் துறையின்கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் சமூக நலத்துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யுமாறும் கோரப்பட்டிருந்தது.
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான தகுதிகள் என்ன ? கடந்த 5 ஆண்டுகளாக எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெற்றது ? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என்பன குறித்து தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி சுப்பிரமணியன், இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால் அது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இடைநிலை ஆசிரியர்களை எவ்வாறு பணி அமர்த்துகிறீர்கள்? : நீதிபதி கேள்வி
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இடைநிலை ஆசிரியர்களை LKG, UKG வகுப்புகளில் பணி அமர்த்தும் அரசாணை ஜனவரி 30ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் தளர்வு கோரி தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது என்றும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள போது, எவ்வாறு உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து LKG, UKG வகுப்புக்கு மாண்டிசோரி, கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டுமென விதி உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, விதிப்படி இல்லாமல் LKG, UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை எவ்வாறு பணி அமர்த்துகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வின்சென்ட் பால்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை ஜனவரி 30ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்