மின் வாரிய பொறியாளர் பணித் தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 03, 2019

மின் வாரிய பொறியாளர் பணித் தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
மின்வாரியத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் : விசாரணை நடத்த அண்ணா பல்கலை., துணைவேந்தர் உத்தரவு
தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 160 மைங்களில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 80,000 பேர் எழுதினர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பதவிக்கான இந்த தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 120 கேள்விகளுக்கான விடைகளை ஓஎம்ஆர் சீட்டில் குறித்து, தேர்வு அறையிலேயே வினாத்தாள்களையும் பெற்றுக்கொள்ளும் விதிமுறை பின்பற்றது. மின் வாரிய பொறியாளர் பணித் தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவிப் பொறியாளர் பணிக்கானத் தேர்வு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடத்தப்பட்டது இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது தமிழகம் முழுவதும் 120 க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று எழுதினர் இந்தத் தேர்வு முடிவுகளை பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வெளியிட மின் வாரியம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்றவர்கள், தேர்வு முடிந்ததும் வினாத் தாளை அவர்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வறையிலேயே கொடுத்துவிட்டு சென்றுவிடவேண்டும் இந்த நிலையில், இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் பிழையின்றி அதற்கான விடைகளுடன் சேர்த்து ஒரு டைரியில் கையால் எழுதப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் கட்செவி அஞ்சலில் வெளியாகியிருந்தன இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுக்கு முன்னரே வினாத் தாள் வெளியானதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றனர் இந்நிலையில் மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா உத்தரவிட்டுள்ளார். கணினிக்கல்வி. மேலும் விசாரணையில் முறைகேடு நடத்திருப்பது உறுதியாக தெரியவந்தால், மறுதேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் நாளை வெளியாகவிருந்த தேர்வு முடிவுகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பொறியியல் தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு, பி.இ. அரியர் மாணவர்களுக்கான கணிதப் பாடம் -2 வினாத் தாள் வெளியானது எனத் தொடர்சர்ச்சைகளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழகம், இப்போது மின் வாரிய பொறியாளர் தேர்வு வினாத் தாள் கசிவு சர்ச்சையிலும் சிக்கியிருப்பது கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
இந்நிலையில் இந்தத் தேர்வின் வினாக்களும், விடைகளும் அடங்கிய குறிப்பேட்டின் பக்கங்கள் வாட்ஸ் ஆப் மூலம் பரவி வருவதால் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக தேர்வு எழுதியவர்கள் அளித்தனர். வினாத்தாளில் குறிப்பிட்டிருந்த கேள்விகள் அனைத்தும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. வினாத்தாளை அண்ணா பேராசிரியர் தயாரித்துள்ள நிலையில், வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தேர்வு நடைபெறும் முன்னரே தேர்வுத்ததாள் வெளியானதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews