போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணியில் சேர்ந்தால், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம் - பள்ளிக்கல்வித்துறை
நாளை பணிக்கு வர தவறினால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம். நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம். 28ம் தேதிக்கு பின்னர் பணிக்குவருபவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற இயலாது. காலியாக இருக்கும் இடத்தில்தான்அவர்கள் பணியில் சேர வேண்டியது இருக்கும்
நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று கருதப்படும்
அவகாசம் முடிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்ட பணியேற்க ஆணை தர வேண்டும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஆசிரியர்கள் நாளையே பணிக்கு திரும்பவேண்டும்... பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அரசு கேட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் நாளைக்குள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் நாளைக்குள் பள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது என பள்ளி கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 22-ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பள்ளிகளின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 28-ம் தேதி மாலைக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், அதற்கு பிறகு அவை காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டதனால் மீண்டும் அதே பணியிடத்தில் இருப்பவர்கள் அந்த வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்டு எந்த காலி பணியிடம் இருக்கிறதோ அதில் தான் சேர முடியும் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்