துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவும்: ஆசிரியர் இதனையும் மாணவர்கள் புரியும் வகையில் கற்பிக்கலாம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 01, 2018

துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவும்: ஆசிரியர் இதனையும் மாணவர்கள் புரியும் வகையில் கற்பிக்கலாம்!!

பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திரு வாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.
தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணித்து கூறி வருபவர் ஆசிரியர் செல்வ குமார். கஜா புயல் வேதாரண்யம் அருகேதான் கரையைக் கடக் கும் என்று துல்லியமாகக் கணித்து கூறியிருந்தார். முன்பு தனுஷ் கோடியை அழித்த புயல் போலவே, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்து வந்தார். அதைக் கேட்டதால்தான் தனது தென்னை மரங்களை கணிச மாக காப்பாற்ற முடிந்தது என் கிறார் இடும்பாவனம் விவசாயி சீனு. இதுபற்றி அவர் கூறியதாவது: நான் ஒரு சாதாரண விவசாயி. 250 தென்னை மரங்களோட ஒரு தோப்பு இருக்கு. தோப்பிலேயே கூரை வீட்டில் குடியிருக்கோம். 10 மாடுகளும் வளர்க்கிறேன்.
கடந்த சில வருஷமாகவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வ குமார் சொல்ற வானிலை செய்தி களை கேட்டு, அதுக்கேத்தபடிதான் சாகுபடி செய்றேன். வேதாரண்யத் தில புயல் அடிக்கப் போவுதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே சொன் னாரு. தனுஷ்கோடிய அழிச்சது போல பயங்கரமா தாக்கப் போவு துன்னும் ஒரு வாரம் முன்னாடியே சொன்னாரு. சேதத்தை எப்படி குறைக்க லாம்னு நிறைய ஆலோசனை களும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு. பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு அதனால, புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆள் வச்சு, ஒவ்வொரு மரத்திலயும் தலா 10 பச்சை மட்டைய வெட்டினேன். தேங்காய், இளநீர், குரும்பை எல்லாத்தையும் இறக்கிட்டேன். குரும்பை மட்டுமே 12 ஆயிரத் துக்கு மேல இருக்கும். இதெல் லாம் நல்லா தேறி, தேங்காயா பறிச்சா ஒன்னேகால் லட்சம் ரூபா வரை விலை கிடைக்கும். இப்போ அவ்வளவும் நஷ்டம்தான். இதுகள வெட்டி இறக்கவே பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு.
வாத்தியார் சொன்னதுபோல, எங்க கூரை வீட்டுலயும், மாட்டு கொட்டகை மேலேயும் பச்சை தென்னை மட்டைய அடுக்கி, கயித்தாலே நல்லா வரிஞ்சு கட்டினேன். வீட்டுக்கு பக்கத்துல நின்ன ஒரு புளிய மரத்தை மட்டும் வெட்ட முடியல. அதனால, அந்த மரம் விழுந்து வீட்டோட அடுப்படி பக்கம் மட்டும் கொஞ்சம் சேதமாயிட்டு. மத்தபடி வீட்டுக்கோ, மாட்டு கொட்டகைக்கோ எந்த பாதிப்பும் இல்ல. தென்னையில 30 மரம் மட்டும் விழுந்துட்டு. இருநூத்தி சொச்சம் மரங்களைக் காப்பாத்திட்டேன்.
வாத்தியாரோட நீண்டகால முன்னறிவிப்பை கேட்டு, நெல் வயல்ல முன்னாடியே நடவை முடிச்சுட்டேன். அதனாலே இப்போ பயிர் நல்லா வளர்ந்து, பாதிப்பு இல்லாம தப்பிச்சது. இவ்வாறு அவர் கூறினார். ‘‘புயல் வர்றதுக்கு முன்னா டியே பச்சை மட்டைகளை வெட்டி னீங்களே, ஊர்ல யாரும் எதுவும் சொல்லலியா?’’ என்று கேட்டதற்கு, “ஊர் மக்களை விடுங்க. எங்க வீட்டுல என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா’’ என்று, மகளைப் பார்த்தார்.
எம்எஸ்சி படித்துள்ள அவரது மகள் சுப கூறும்போது, ‘‘பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். ‘நல்லா வளர்ந்துட்டு இருக்கிற மரத்தில் இப்படி வெட்டாதீங்க’ன்னு கெஞ்சி னோம். நாங்க சொன்னதால, சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள்தான் இப்போ விழுந்து கிடக்குது. அப்பாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தா, இந்த மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார். தொடர்ந்து பேசிய விவசாயி சீனு, ‘‘ஒருவேளை புயல் வீசாமல் போயிருந்தால், பச்சை மட்டை களை வெட்டித் தள்ளிய நான் கிராமத்தில் பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருப்பேன். அதை நான் பெரிய விஷயமா நினைக்கல. அந்த கிண்டல், கேலியைக்கூட நான் ஏத்துக்கு வேன். ஆனால், அந்த நஷ்டம் என்னோட போயிருக்கும். இப்ப புயல் அடிச்சு ஊரே அழிஞ்சு கிடக்கிற சூழ்நிலையில, என் மரத்தைக் காப்பாத்திட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடிய வில்லை...’’ என்று வேதனையோடு கூறினார் சீனு.
துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடி வும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதா ரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பல ருக்கு இது வழிகாட்டியாக இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்!
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews