பிளஸ் 1 தேர்வு: தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 01, 2018

பிளஸ் 1 தேர்வு: தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கும் 2017-18-ஆம் கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த விதிமுறை மாற்றப்பட்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிளஸ் 1 தனித் தேர்வர்கள் செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம். குறைந்த பட்ச வயது 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது.
எழுத்துத் தேர்வில் 90-க்கு பெறும் மதிப்பெண், 100-க்கு கணக்கிடப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே சான்றிதழ் வழங்கப்படும்; அதுவரை, மதிப்பெண் பட்டியல் மட்டுமே வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை, அரசு தேர்வுத் துறையின் http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews