இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து அம்சமாகும். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் விரைவாக தங்கள் இலக்கை அடைய ரயில் பயணம் மிகவும் உதவி செய்கிறது.
பொதுவாக நாம் ரயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது ரயில்களை பார்க்கும்போது ஒவொரு ரயிலிலும் இறுதி பெட்டியில் X என்ற அடையாளம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? வாங்க அதற்கு அர்த்தம் என்று பார்க்கலாம்.
அதன் அர்த்தம் என்னவென்றால் ரயிலில் கடைசி பெட்டி இதுதான், இதற்கு பின் பெட்டிகள் இல்லை என்று அர்த்தம். மேலும் சில சமயங்களில்,ரயில்கள் இரவில் பயணம் செய்யும் போது வெளிச்சம் இல்லாத பகுதிக்குள் கடைசிப்பெட்டியில் விளக்கு எரியவில்லை என்றாலோ,ரயில் பாதி வழியில் ஏதாவது காரணங்களுக்காக நிறுத்தப்பட்டால் அது தெரியாமல் பின்னே வரும் ரயில் முன்னே உள்ள ரயிலை அடையாளம் காணவும் இந்த X வடிவிலான அடையாளம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த X அடையாளத்தை தவிர X அடையாளத்திற்கு கீழே ஒவ்வொரு சிவப்பு விளக்கு ஒவ்வொரு ஐந்து நிமிடங்கள் விட்டு விட்டு எரியும். இதுமட்டும் இல்லாமல் பெட்டியின் ஓரத்தில் 'LV' என்ற வார்த்தைகளுடன் ஒரு குழு உள்ளது. அதன் நிறம் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த அடையாளம் ரயில் பாதுகாப்பாக உள்ளது என்று குறிக்கிறது. ஒருவேளை இந்த LV அடையாளம் இல்லாவிட்டால் இரயில் ஆபத்தில் உள்ளது என்றும் உடனே உதவி தேவை என்றும் அர்த்தம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்