TNPSC Group 2 Exam திட்டமிட்டபடி நவ.11-ம் தேதி நடைபெறும்: பயிற்று மொழியில் வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி., விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 06, 2018

TNPSC Group 2 Exam திட்டமிட்டபடி நவ.11-ம் தேதி நடைபெறும்: பயிற்று மொழியில் வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், குரூப் 2 தேர்வு வினாத்தாள் பற்றிய ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், தேர்வுக்குத் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
'பல்கலைகளில், பாடங்கள் நடத்தப்பட்ட பயிற்று மொழி அடிப்படையில் மட்டுமே, வினாத்தாள் தயாரிக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 2 பதவிகளுக்கான போட்டி தேர்வில் சிலவற்றுக்கு, நடப்பாண்டில், தமிழில் தேர்வு நடத்த முடியாது என்பது போன்ற, தவறான செய்திகள், ஊடகங்களில் வெளி வந்துள்ளன. அனைத்து தேர்வுகளுக்குமான, வினாத்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆங்கிலம் மட்டுமே, பயிற்று மொழியாக உள்ள சில பாடங்களுக்கு மட்டுமே, ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. பயிற்று மொழி, தமிழில் இருந்தால், வினாத்தாள்களும் கண்டிப்பாக, தமிழில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தகவல்கள், தேர்வு அறிவிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்படுகிறது. வரும், 11ம் தேதி நடக்கும் குரூப் - 2 முதல் நிலை தேர்வு வினாத்தாளில், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துடன், பொது அறிவு, சிந்தனை திறனை சோதிக்கும் கேள்விகள் இடம்பெறும். இதற்கான வினாத்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரண்டு மொழிகளில் தயாரிககப்பட்டுள்ளன. முதன்மை எழுத்து தேர்வுக்கு, பொது அறிவு வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த வினாத்தாளும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய, இரண்டு மொழிகளில் இருக்கும். இந்த தகவல், தேர்வுக்கான அறிவிக்கையில், ஏற்கனவே கூறப்பட்டுஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews