CTET நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்: Click Here To Download - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

CTET நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்: Click Here To Download



மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, இன்று பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'சிடெட்' என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம், வரும், 9ம் தேதி நடத்துகிறது நாடு முழுவதும், 92 நகரங்களில், 2,296 மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு முதல் தாள் தேர்வு, டிச., 9 காலை, 9:30 மணிக்கு துவங்கி, பகல், 12:00 மணிக்கு முடியும்; இரண்டாம் தாள் தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 மணிக்கு முடியும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், http://www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படுகிறது

இந்த, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், வரும், 30ம் தேதிக்குள், சி.பி.எஸ்.இ.,யை உரிய ஆவணங்களுடன் அணுகி, அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு கிடைக்காதோர் இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews