தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்கவும், பள்ளி நிர்வாகம் எடுத்த புது முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 20, 2018

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்கவும், பள்ளி நிர்வாகம் எடுத்த புது முயற்சி

சேட்டை மாணவர்களை தனி வகுப்பறையில் அமர்த்தி, கேமரா வழியாக கண்காணிக்கும் முயற்சியில், துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் இறங்கி உள்ளது
துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,993 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, 55 வகுப்பறைகள், 63 ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பள்ளியில், துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், பிளஸ் 2 படிக்கும் சில மாணவர்கள், படிப்பில் பின்தங்கி உள்ளனர். குறிப்பாக, வணிகவியல், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள், 29 பேர், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.
வகுப்பறையில், அவர்களின் சேட்டையும் அதிகரித்தது. இவர்களால், நன்றாக படிக்கும் மாணவர்களின் கவனமும் திசை திரும்பும் சூழல் ஏற்பட்டதால், பள்ளி தேர்ச்சி சதவீதம் குறையும் என, ஆசிரியர்கள் அச்சப்பட்டனர்.இதையடுத்து, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்கவும், பள்ளி நிர்வாகம் புது முயற்சி எடுத்துள்ளது. இதன்படி, படிப்பில் பின்தங்கி, அதிக சேட்டை செய்யும், 29 மாணவர்களை, தனி வகுப்பில் அமரச் செய்துள்ளனர். அவர்களுக்கு, ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி பாடம் நடத்துகின்றனர். மேலும், வகுப்பறையில், 'கேமரா' பொருத்தப்பட்டு உள்ளது. இந்த முயற்சியை, ஐந்து மாதங்களாக பள்ளி நிர்வாகம் கடைபிடித்து வருகிறது
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: வகுப்பறையில் கேமரா வைத்தபின், மாணவர்களின் சேட்டை குறைந்துள்ளது. சில மாணவர்களுக்கு, அவர்கள் வாழும் சூழலில் இருந்து, சில தவறான பழக்கம் ஏற்படுகிறது. சேட்டை செய்யும் அவர்கள், படிப்பில் கவனம் செலுத்தாமல் தோல்வி அடைந்தனர். அவர்களை, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையும் வகையில், இந்த புது முயற்சியை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews