இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 05, 2018

இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலவச ஏசி, பிரிட்ஜ் ரிப்பேரிங் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் வழிகாட்டுதலுடன், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில்,இலவச ஏசி, பிரிட்ஜ் ரிப்பேரிங் பயிற்சி வரும் 22ம் தேதி துவங்குகிறது.
சுய வேலை வாய்ப்பில் ஆர்வமுள்ள, 5ம் வகுப்பு வரை படித்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அனைவரும், இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் 30 நாட்கள் (240 மணி நேரம்) ஆகும். இந்த பயிற்சி காலத்தில் சுயதொழில் பயிற்சியுடன், தொழில் முனைவோர் பயிற்சியும் சேர்த்து வழங்கப்படும். பயிற்சிக்கு பின் கடன் பெற ஆலோசனைகளும் அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் பயிற்சிக்கு தேவையான பொருட்கள் இலவசம்.
பயிற்சிகள் அனைத்தும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை முழுநேர பயிற்சிகள் ஆகும். விவரங்களுக்கு, இந்தியன் வங்கி, சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 258, லெனின் வீதி, குயவர்பாளையம் (மணிமேகலை பள்ளி எதிரில்), புதுச்சேரி-13 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 0413-2246500, 75982 66671 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews