உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 19 (November 19 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 19, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 19 (November 19 )






நவம்பர் 19 (November 19 ) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய
புவேர்ட்டோ ரிக்கோ ) எனப் பெயர் சூட்டினார்.

1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும்
பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர் : அமெரிக்க அரசுத்தலைவர்
ஆபிரகாம் லிங்கன்
கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.
1881 – உக்ரேனில் ஒடெசா நகரில்
விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.
1912 – முதலாம் பால்க்கன் போர்:
செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம்,
மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர் : மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி ,
கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்:
ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1943 – பெரும் இன அழிப்பு :
நாட்சிகள் மேற்கு உக்ரைனில்
லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து ,
சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர்
பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.
1977 – எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக
இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.
1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம் ,
கட்டுவன் என்ற இடத்தில்
கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட
தீ விபத்தில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர்.
1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன்,
சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும்
ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
1999 – சீனா தனது முதலாவது
சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.

2002 – கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் பிரெஸ்டிச் கலீசியா அருகே இரண்டாகப் பிளந்ததில், 76,000 கனமீ எண்ணெய் கசிந்தது.
2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்
1600 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (இ. 1649 )
1711 – மிகைல் இலமனோசொவ் , உருசிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1765 )
1775 – யொஃகான் இல்லிகெர் , செருமானிய விலங்கியலாளர் (இ.
1813 )
1828 – இராணி இலட்சுமிபாய் ,
ஜான்சி பேரரசி (இ. 1858 )
1831 – சேம்சு கார்ஃபீல்டு , அமெரிக்காவின் 20வது
அரசுத்தலைவர் (இ. 1881 )
1845 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1939 )
1907 – மு. திருச்செல்வம் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976 )
1909 – பீட்டர் டிரக்கர் , ஆத்திரிய-அமெரிக்கக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2005)

1914 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே , இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி (இ. 1982 )
1917 – இந்திரா காந்தி , 3வது
இந்தியப் பிரதமர் (இ. 1984 )
1918 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட் , இடச்சு வானியலாரும். கணிதவியலாளர் (இ. 2000 )
1918 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா , இந்திய மார்க்சியப் புலமையாளர் (இ. 1993 )
1923 – சலில் சௌதுரி, இந்திய இயக்குநர், இசையமைப்பாளர் (இ.
1995 )
1928 – தாரா சிங் , இந்திய மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி (இ. 2012 )
1932 – எலினார் பிரான்சிசு கெலின் , அமெரிக்க வானியலாளர் (இ. 2009 )
1933 – ஜேக் வெல்ச், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
1936 – அரவிந்த் பட்நாகர் , இந்திய வானியலாளர் (இ. 2006 )
1938 – டெட் டேர்னர் , அமெரிக்கத் தொழிலதிபர்
1939 – எஸ். எம். கார்மேகம் , இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2005 )
1951 – சீனத் அமான் , இந்தியத் திரைப்பட நடிகை
1954 – அப்துல் பத்தா அல்-சிசி , எகிப்தின் 6வது அரசுத்தலைவர்
1961 – பத்மஸ்ரீ சின்னக்கலைவாணர் ஜனங்களின் கலைஞன்  விவேக் , தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிறந்தநாள் 

1961 – மெக் ரையன், அமெரிக்க நடிகை
1973 – சகீலா, இந்திய நடிகை
1975 – சுஷ்மிதா சென் , இந்தித் திரைப்பட நடிகை
1976 – அருண் விஜய், தமிழகத் திரைப்பட நடிகர்
1976 – ஜேக் டோர்சி, அமெரிக்கத் தொழிலதிபர், டுவிட்டரை ஆரம்பித்தவர்களில் ஒருவர்
1986 – சுவேதா மோகன் , இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

இறப்புகள்
498 – இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
1665 – நிக்கோலா போசின் , பிரான்சிய-இத்தாலிய ஓவியர் (பி.
1594 )
1806 – இரண்டாம் ஷா ஆலம் , இந்தியாவின் 16-வது முகலாயப் பேரரசர் (பி. 1728 )
1828 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1797 )
1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ , எசுப்பானியப் பிரதமர் (பி. 1892 )

1975 – சாலமன் பிக்கெல்னர் , உருசிய-சோவியத் வானியலாளர் (பி. 1921 )
1982 – எஸ். ஏ. அசோகன், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1931 )
1998 – புச்சியித்தா தெத்துசுயா , சப்பானிய-அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1920)
2008 – எம். என். நம்பியார் , தென்னிந்திய நடிகர் (பி. 1919 )
2011 – பேசில் ட'ஒலிவேரா , தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1931)
2013 – பிரடெரிக் சேங்கர் , நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1918)
2017 – சார்லஸ் மேன்சன் , அமெரிக்க மதத் தலைவர், கொலையாளி (பி.
1934 )


சிறப்பு நாள் 
அனைத்துலக ஆண்கள் நாள்
உலகக் கழிவறை நாள்
விடுதலை நாள் (மாலி)

வெளி இணைப்புகள்
பிபிசி: இந்த நாளில் Click Here
நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில் Click Here
கனடா : இந்த நாளில் Click Here

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews