உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 17 (November 17 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 17, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 17 (November 17 )



நவம்பர் 17 (November 17 ) கிரிகோரியன் ஆண்டின் 321 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 322 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1292 – ஜோன் பலியல்
இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.
1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது.
1511 – எசுப்பானியா மற்றும்
இங்கிலாந்து ஆகியன
பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்:
பிரெஞ்சுப் படைகள்
ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை
வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது.
1811 – ஒசே மிகுவேல் கரேரா
சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1820 – கப்டன் நத்தானியல் பால்மர்
அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார்.
பால்மர் குடாநாடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
1831 – எக்குவாடோர் மற்றும்
வெனிசுவேலா ஆகியன பாரிய
கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 – எகிப்தில், நடுநிலக் கடலையும் , செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1873 – பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
1878 – இத்தாலி மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. மன்னர் சிறு காயங்களுடன் தப்பினார்.
1903 – உருசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி
போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது. [1]

1922 – முன்னாள் உதுமானிய சுல்தான் ஆறாம் மெகெமெத்
இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 – செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக
அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
1947 – அமெரிக்க அறிவியலாளர்கள்
ஜான் பார்டீன், வால்ட்டர் பிராட்டேன் ஆகியோர் திரான்சிஸ்டரின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டின்
மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.
1950 – லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில்
திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.
1953 – அயர்லாந்து, பிளாசுக்கெட் தீவுகளில் இருந்து அங்கு வாழ முடியாத சூழலில் எஞ்சிய குடிமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1969 – பனிப்போர்: பேரழிவு ஆயுதங்களைக் குறைக்கும் முகமாக சோவியத், அமெரிக்க அதிகாரிகள் எல்சிங்கியில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
1983 – தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.

1989 – பனிப்போர்:
செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல்
கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
1993 – நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.
1997 – எகிப்தில், அல்-உக்சுர் நகரில்
இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – பெருவில் அரசுத்தலைவர்
ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2012 – எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
2013 – உருசியாவில் கசான் விமானநிலயத்தில் தத்தாரிஸ்தான் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

9 – வெசுப்பாசியான் , உரோமைப் பேரரசர் (இ. 79) [2]
1865 – ஜான் சுடேன்லி பிளாசுகெட் , கனடிய வானியலாளர் (இ. 1941 )
1870 – செர்கேய் பிளாசுக்கோ, உருசிய வானியலாளர் (இ. 1956 )
1885 – சார்லசு ரோஷர் , அமெரிக்கத் திரைப்பட ஒளிப்பதிவாளர் (இ. 1974 )
1887 – பெர்னார்ட் மோண்ட்கோமரி , ஆங்கிலேய படைத்துறை அதிகாரி (இ. 1976 )
1896 – லெவ் வைகாட்ஸ்கி , பலருசிய-உருசிய மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1934 )
1904 – இசாமு நொகுச்சி , அமெரிக்க கட்டிடக்கலைஞர், சிற்பி (இ. 1988 )
1906 – சோய்செரோ ஹோண்டா ,
ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்த சப்பானியப் பொறியியலாளர் (இ. 1991)

1909 – சி. இலக்குவனார் , தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)
1917 – க. வேலாயுதம் , ஈழத்து எழுத்தாளர் (இ. 2009 )
1920 – ஜெமினி கணேசன் , தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் (இ. 2002 )
1922 – இசுட்டான்லி கோகென் ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
1927 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
1929 – பி. சி. சேகர் , மலேசியத் தமிழ் வேதியியலாளர், இரப்பர் தொழிலை நவீனமயப் படுத்தியவர் (இ. 2006 )
1930 – பிரேம்ஜி ஞானசுந்தரம் , இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)
1942 – காயிங் கெக் இயேவ் , கம்போடியக் குற்றவாளி
1942 – மார்ட்டின் ஸ்கோர்செசி , அமெரிக்க இயக்குநர், நடிகர்
1950 – கோகிலா மகேந்திரன் , ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர், நாடகக் கலைஞர்
1951 – திருச்சி பிரேமானந்தா, இலங்கை-இந்தியத் துறவி (இ. 2011)
1952 – சிறில் ரமபோசா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி
1972 – ரோஜா செல்வமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1978 – கீர்த்தி ரெட்டி , தெனிந்தியத் திரைப்பட நடிகை
1982 – யூசுஃப் பதான் , இந்தியத் துடுப்பாளர்
1983 – கிறிஸ்டோபர் பாலோனி , அமெரிக்க எழுத்தாளர்

இறப்புகள்
1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி (பி. 1516 )
1796 – இரண்டாம் கத்தரீன் , உருசியப் பேரரசி (பி. 1729 )
1858 – இராபர்ட்டு ஓவன் , உவெல்சு செயற்பாட்டாளர் (பி. 1771 )
1917 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (பி. 1840 )
1928 – லாலா லஜபதி ராய் , இந்திய அரசியல்வாதி (பி. 1865 )
1973 – மிரா அல்பாசா , பிரான்சிய-இந்திய ஆன்மீகத் தலைவர் (பி. 1878)

1989 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி.
1924 )
2000 – இலூயீ நீல் , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1904)
2010 – பி. விருத்தாசலம் , தமிழகத் தமிழறிஞர் (பி. 1940 )
2012 – பால் தாக்கரே , மகாராட்டிர-இந்திய அரசியல்வாதி (பி. 1926 )
2013 – டோரிஸ் லெசிங் , நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)
2013 – பூரணி, தமிழக எழுத்தாளர் (பி. 1913)
2013 – திடீர் கண்ணையா , நகைச்சுவை நடிகர் (பி. 1937)
2015 – பித்துக்குளி முருகதாஸ் , பக்திப் பாடகர் (பி. 1920 )

சிறப்பு நாள்
அனைத்துலக மாணவர் நாள்


பிபிசி: இந்த நாளில் Click Here
நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில் Click Here
கனடா : இந்த நாளில்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews