உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 16 (November 16 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 16, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 16 (November 16 )



நவம்பர் 16 (November 16 ) கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது
சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.
1532 – எசுப்பானியத் தளபதி
பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரட்சர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.

1776 – அமெரிக்கப் புரட்சி : ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன.
1793 – பிரெஞ்சுப் புரட்சி :
நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1797 – புருசியாவின் மன்னராக மூன்றாம் பிரெடெரிக் வில்லியம்சு முடி சூடினார்.
1846 – இலங்கையில் கைம்பெண்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. [1]
1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு, கடுந்தொழில் செய்யக் கட்டளையிடப்பட்டார்.
1885 – கனடாவின் மேட்டிசுப்
பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
1904 – ஆங்கிலேயப் பொறியியலாளர் ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 – ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
1920 – ஆத்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாசு ஆரம்பிக்கப்பட்டது.

1933 – ஐக்கிய அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1938 – எல்எசுடி முதல் தடவையாக
ஆல்பர்ட் ஹாப்மன் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. [2]
1940 – இரண்டாம் உலகப் போர் : பிரித்தானிய வான்படை ஆம்பர்கு மீது குண்டுகளை வீசியது.
1944 – இரண்டாம் உலகப் போர்:
கூட்டுப் படைகளின் குயின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர் :
செருமனியின் டியூரென் நகரம்
கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1945 – பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது
வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 – மூன்று விண்ணோடிகளுடன் 84 நாள் பயணமாக ஸ்கைலேப் 4 விண்கலத்தை நாசா ஏவியது.
1974 – ஆரசீபோ தகவல் புவேர்ட்டோ ரிக்கோவில் அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 – மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எல் சல்வடோர் இராணுவத்தினர் இயேசு சபையைச் சேர்ந்த ஆறு மதகுருக்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர்.
2002 – சார்சு நோய் முதன் முதலில்
சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

பிறப்புகள்
1717 – ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட் , பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ.
1783 )
1922 – ஜோசே சரமாகூ , நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 2010 )
1930 – சின்னுவ அச்செபே, நைஜீரிய எழுத்தாளர் (இ. 2013 )
1938 – ரோபேர்ட் நோசிக் , அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 2002 )
1962 – அம்பிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1971 – வக்கார் யூனிசு, பாக்கித்தானியத் துடுப்பாளர்
1983 – தமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1985 – ஆதித்யா ராய் கபூர் , இந்தித் திரைப்பட நடிகர்

இறப்புகள்
1240 – இப்னு அரபி, அராபிய மெய்யியலாளர் (பி. 1165 )
1801 – ஊமைத்துரை , இந்திய விடுதலைப் போராட்ட வீரர்,
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி
1903 – திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை , தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1869 )
1960 – கிளார்க் கேபிள், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1901 )
1977 – கனக செந்திநாதன் , ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1916)

1985 – சித்பவானந்தர் , இந்தியத் துறவி (பி. 1898 )
2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1912 )

சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்

வெளி இணைப்புகள்
பிபிசி: இந்த நாளில் Click Here
நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில்
கனடா : இந்த நாளில்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews