அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி ட்ரீட்! தமிழக அரசு புதிய அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 30, 2018

அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி ட்ரீட்! தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் திங்கட்கிழமையான நவம்பர் 5-ம் தேதி விடுமுறை எடுத்து தீபாவளியை கொண்டாட முடிவு செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை என அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது என வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தொடர்ச்சியாக நான்கு நாள் விடுமுறை கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் தமிழக அரசு ஊழியர்களும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews