தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.22 லட்சம் பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்
ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது
பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்
கவிதைப் போட்டி :
முதல் பரிசு- பீ.ஜோசி அபர்ணா, வித்யாகிரி மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்,
இரண்டாம் பரிசு- செ.சுகசஞ்சய்,
ஸ்ரீசரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டம்,
மூன்றாம் பரிசு- மா.சண்முகநந்தா, பி.எம்.வி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
கட்டுரைப் போட்டி :
முதல் பரிசு- ம.திவ்யா, புனித மரியண்ணன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்,
இரண்டாம் பரிசு-
ரா.திவ்யதர்சினி, நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம்,
மூன்றாம் பரிசு-
ஆ.ராஜலட்சுமி, பா.தொ.ந.உ.க. மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்.
பேச்சுப் போட்டி :
முதல் பரிசு-
சை.புவனேஸ்வரி, எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை,
இரண்டாம் பரிசு- ரோஷிணி,
கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை,
மூன்றாம் பரிசு-
மதுமிதா, பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி.
கல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்
கவிதைப் போட்டி :
முதல் பரிசு-
த.கார்த்திகா, செந்தமிழ்க் கல்லூரி, மதுரை,
இரண்டாம் பரிசு-
இரா.மணிகண்டன், ஜவஹர் அறிவியல் கல்லூரி, கடலூர்,
மூன்றாம் பரிசு-
க.அனிதா, மன்னர் சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர்.
கட்டுரைப் போட்டி :
முதல் பரிசு- ப.தேவி, பாத்திமா கல்லூரி, மதுரை,
இரண்டாம் பரிசு-
இ.மரிய ரோஸ்லின் மேரி, கொன்சாகா மகளிர் கல்லூரி, கிருஷ்ணகிரி,
மூன்றாம் பரிசு-
க.பாண்டித்துரை, எஸ்.ஆர்.வி. கல்வியியல் கல்லூரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
பேச்சுப் போட்டி :
முதல் பரிசு-
ந.விஜயநம்பி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி,
இரண்டாம் பரிசு-
மூ.ஜனனி, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,
மூன்றாம் பரிசு-
நவீன் லூர்து ராஜ், ஆனந்தா கல்லூரி, சிவகங்கை மாவட்டம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here