உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 20 ( October 20 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 20, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 20 ( October 20 )




அக்டோபர் 20 ( October 20 )
கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா ,
பிரான்சு, புருசியா , பவேரியா ,
சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது.
1803 – அமெரிக்க மேலவை
லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
1818 – அமெரிக்காவிற்கும் , ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1827 – துருக்கிய , எகிப்தியப் படைகளை பிரித்தானீய ,
பிரெஞ்சு , உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1904 – சிலியும் பொலிவியாவும் தமது எல்லைகளை நிர்ணயிக்கும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக் கொண்டன.
1941 – கிறகுஜேவாச் படுகொலைகள் : செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்:
சோவியத் இராணுவம்
யுகோசுலாவியத் தலைநகர்
பெல்கிரேட்டை
செருமனியிடமிருந்து மீட்டது.
1944 – கிளீவ்லாந்து நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – பாக்கித்தானும் , ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின.
1952 – கென்யாவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1961 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.
1962 – சீனா லடாக் மற்றும்

மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது.
இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.
1968 – அமெரிக்காவின் முன்னாள்
முதலாவது சீமாட்டி ஜாக்குலின் கென்னடி கிரேக்கத் தொழிலதிபர் அரிசுடாட்டில் ஒனாசிசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1973 – இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒப்பேரா மாளிகையைத் திறந்து வைத்தார்.
1976 – மிசிசிப்பி ஆற்றில் ஜார்ஜ் பிரின்சு என்ற பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
1982 – மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் ஸ்பர்த்தாக், மற்றும் டச்சு ஆர்லெம் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.
1982 – இலங்கையில் முதலாவது
அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
1991 – இந்தியாவின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு
நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
2001 – இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2004 – முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
2011 – லிபிய உள்நாட்டுப் போர் :
தேசிய இடைக்காலப் பேரவை போராளிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் முஅம்மர் அல் கதாஃபியை அவரது சொந்த நகரில் கைப்பற்றிப் படுகொலை செய்தனர்.
பிறப்புகள்
1632 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய கட்டிடக்கலைஞர் (இ.
1723 )
1822 – தோமஸ் ஹியூக்ஸ் , ஆங்கிலேய நீதிபதி (இ. 1896)
1854 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (இ. 1891 )
1859 – ஜான் டூயி, அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (இ.

1952 )
1874 – எமில் போஸ், செருமானிய இயற்பியலாளர் (இ. 1911 )
1884 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1-வது பிரதமர் (இ.
1952 )
1891 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1974 )
1894 – ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (இ. 1920 )
1904 – புபேசு குப்தா , இந்திய அரசியல்வாதி (இ. 1981 )
1909 – மீ. கல்யாணசுந்தரம் , தமிழக அரசியல்வாதி (இ. 1988 )
1913 – கந்தையா திருஞானசம்பந்தன் , ஈழத்து எழுத்தாளர் (இ. 1995 )
1917 – சே. மா. செல்லத்தம்பு , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1920 – வீராசாமி ரிங்காடு, மொரிசியசு நாட்டின் ஆளுனர் (இ.
2000 )
1923 – தொ. மு. சி. ரகுநாதன் , தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001 )
1923 – வி. எஸ். அச்சுதானந்தன் , கேரள மாநிலத்தின் 20வது முதலமைச்சர்
1925 – ஆர்ட் புச்வால்ட் , அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2007 )
1938 – க. சின்னத்தம்பி , ஈழத்துக் கல்வியியலாளர்
1946 – எல்ஃபிரெட் எலினெக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய எழுத்தாளர்
1951 – கிளாடியோ ரனெய்ரி, இத்தாலியக் கால்பந்து வீரர்
1954 – ந. செல்வராஜா , இலங்கை நூலகவியலாளர், ஆய்வாளர்
1956 – டேனி பாயில் , ஆங்கிலேய இயக்குநர்
1957 – குமார் சானு , இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1958 – விக்கோ மோர்டென்சென் , அமெரிக்க நடிகர்
1962 – சிறீதர் பிச்சையப்பா , இலங்கை மேடை, தொலைக்காட்சி நாடகக் கலைஞர் (இ. 2010 )
1963 – நவ்ஜோத் சிங் சித்து , இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1964 – கமலா ஆரிசு, அமெரிக்க அரசியல்வாதி
1971 – ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் கலைஞர்
1974 – பா. விஜய் , தமிழ் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்
1977 – ரிச்சர்ட் ரிசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்
1570 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி.
1496 )
1631 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர் (பி.
1550 )
1936 – ஆனி சலிவன், அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1866 )
1972 – ஆர்லோவ் சேப்ளே , அமெரிக்க வானியலாளர் (பி. 1885 )
1984 – கார்ல் பெர்டினான்ட் கோரி ,
நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க உயிரியலாளர் (பி. 1896 )
1984 – பால் டிராக் , நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1902 )
1997 – ஜீவா ஜீவரத்தினம் , ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1939 )
2008 – ஸ்ரீதர் , தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933 )
2011 – முஅம்மர் அல் கதாஃபி , லிபியத் தலைவர் (பி. 1942 )
2014 – ராஜம் கிருஷ்ணன் , தமிழக எழுத்தாளர் (பி. 1925 )
2016 – ஜூன்கோ டபெய் , சப்பானிய மலையேறி (பி. 1939)
சிறப்பு நாள்
புரட்சி நாள் ( குவாத்தமாலா )


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews