மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்கச்செய்யும் 12 டிப்ஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 24, 2018

மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்கச்செய்யும் 12 டிப்ஸ்!

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, நிறைய சம்பாதிப்பது நினைத்ததை வாங்குவது அல்ல. கடன் வாங்காமல் வாழ்வதே. திடீர் என ஒரு செலவு வரும்போது, கையைப் பிசைந்து முழிப்பதைவிட, எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கும்போதே, சிறு தொகையைச் சேமிப்பது நல்லது. நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது அவசியம். இதைக் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது என்பது பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், ஷியாமளா ரமேஷ் பாபு.
1.அத்தியாவசியமான பொருள் எது? ஒரு பொருளை அவசியத்துக்காகவே பயன்படுத்துகிறோமா என்று பகுத்தறிய குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். பெற்றோர்களும் அந்தக் கொள்கையை வீட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். 2.கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள். 3. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள். 4. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்
5. சிறு சேமிப்பைப் பழக்குவதன் மூலம், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பேணலாம். உதாரணமாக, 'செல்லத்துக்கு சிப்ஸ் வேணுமா? அதுக்குப் பதிலா சிப்ஸ் பாக்கெட் காசை உண்டியலில் போட்டுவெச்சு வேற வாங்கலாமா?' எனக் கேளுங்கள். ஆரோக்கிய கேடு விளைவிக்கும் நொறுவலிலிருந்து அவர்கள் கவனத்தை ஆரோக்கியமான சேமிப்பின் பக்கம் திருப்பலாம். 6. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள் 7. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள். 8. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
9. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம் 10. ஷாப்பிங் செல்லும்போது, குழந்தையையும் அழைத்துச்சென்று தேவையான பொருளை வாங்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன்பு, அதன் விலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். பலமுறை யோசித்த பின்னரே ஒரு பொருளை வாங்க வேண்டும் என்பது போன்ற பழக்கங்களைக் குழந்தைகளுக்குப் புரியவைப்பது அவசியம். 11. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள். 12. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews