உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 12 ( October 12 ) நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 12, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 12 ( October 12 ) நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாள்

அக்டோபர் 12 ( October 12 ) கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. 1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து , போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1748 – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன. 1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார். 1792 – கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது. 1798 – பிளம்மிய, லக்சம்பர்க் விவசாயிகள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1798 – இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக நியமிக்கப்பட்டார். [1] 1822 – முதலாம் பேதுரு பிரேசில் பேரரசராக முடிசூடினார். 1823 – சார்லசு மேகிண்டோச் தான் தயாரித்த முதலாவது மழைச்சட்டையை விற்பனைக்கு விட்டார். 1871 – பிரித்தானிய இந்தியா குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் குளுக்கள் ' குற்ற சமூகங்களாக' அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது. 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் "செயலாட்சி மாளிகை" என்ற பெயரை வெள்ளை மாளிகை என அதிகாரபூர்வமாக மாற்றினார். 1915 – முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1918 – மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர். 1944 – இரண்டாம் உலகப் போர்: ஏதென்சு நகரம் அச்சு நாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. 1960 – சப்பான் சோசலிசக் கட்சித் தலைவர் இனசீரோ அசனூமா குத்திப் படுகொலை செய்யப்பட்டமை நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது. 1963 – சோவியத் ஒன்றியத்தில் 23 ஆண்டுகளாக சிறை வக்கப்பட்டிருந்த இயேசு சபை மதப்பரப்புனர் வால்டர் சிசெக் விடுதலை செய்யப்பட்டார். 1964 – சோவியத் ஒன்றியம் வசுகோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது விண்கலமும், விண் உடைகள் இல்லாமல் விண்ணுக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்.. 1968 – எக்குவட்டோரியல் கினி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 – வியட்நாம் போர்: கிறித்துமசுக்கு முன்னதாக 40,000 அமெரிக்கப் படையினர் வெளியேறவிருப்பதாக அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
1971 – பாரசீகப் பேரரசின் 2,500 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. 1984 – ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுவெடிப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர், 31 பேர் காயமடைந்தனர். 1986 – மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார். 1986 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் , எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோர் சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டனர் 1992 – எகிப்தில் கெய்ரோ நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 510 பேர் உயிரிழந்தனர். 1993 – இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. 1994 – மெகல்லன் விண்ணுளவி வெள்ளியின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது. 1999 – முன்னாள் சோவியத் தன்னாட்சிக் குடியரசு அப்காசியா சியார்சியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1999 – பாகித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பெர்வேசு முசாரப் நவாசு செரீபை ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார். 1999 – உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது. 2000 – ஏடனில் அமெரிக்காவின் கோல் கப்பல் இரண்டு தற்கொலைக் குண்டுகளால் சேதமடைந்தது. 17 மாலுமிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் உயிரிழந்தனர். 2001 – அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர். 2003 – பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர். 2005 – சீனாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்பு விண்கலம் சென்சூ 6 இரண்டு வீரர்களுடன் ஏவப்பட்டது. 2017 – யுனெசுக்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது. [2] தொடர்ந்து இசுரேலும் வெளியேறியது.
பிறப்புகள் 1537 – ஆறாம் எட்வர்டு , இங்கிலாந்து மன்னர் (இ. 1553 ) 1798 – முதலாம் பேதுரு , பிரேசில் பேரரசர் (இ. 1834 ) 1811 – தாமஸ் சி. ஜெர்டன் , பிரித்தானிய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (இ. 1872 ) 1864 – காமினி ராய் , வங்காளக் கவிஞர், சமூகப் பணியாளர் (இ. 1933 ) 1891 – இதித் ஸ்டைன் , செருமானிய-யூத மெய்யியலாளர் (இ. 1942 ) 1891 – எஸ். வையாபுரிப்பிள்ளை , தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956 ) 1896 – எயுஜேனியோ மொண்டாலே, நோபல் பரிசு பெற்ற இத்தாலியக் கவிஞர் (இ. 1981 ) 1906 – முல்க் ராஜ் ஆனந்த், இந்திய புதின எழுத்தாளர் (இ. 2004 ) 1911 – விஜய் மேர்ச்சன்ட், இந்தியத் துடுப்பாளர் (இ. 1987 ) 1912 – நெ. து. சுந்தரவடிவேலு , தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (இ. 1993 ) 1913 – தம்பையா ஏகாம்பரம் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1962 ) 1918 – மு. அ. சிதம்பரம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2000) 1918 – கே. கே. பிர்லா , இந்தியத் தொழிலதிபர் (இ. 2008) 1921 – ஆர்ட் குலொக்கி , களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களின் முன்னோடி (இ. 2010 ) 1935 – சிவ்ராஜ் பாட்டீல் , இந்திய அரசியல்வாதி 1935 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர், நடிகர் (இ. 2007 ) 1942 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர், சிற்பி, எழுத்தாளர் (இ. 2009 ) 1950 – சென் சூயி-பியான் , தாய்வான் அரசியல்வாதி 1952 – யோசப் பொன்னையா, மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் 1968 – ஹியூ ஜேக்மன் , ஆத்திரேலிய நடிகர், பாடகர் 1981 – சினேகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை 1991 – அக்சரா ஹாசன் , இந்தியத் திரைப்பட நடிகை 1992 – ஜோஷ் ஹட்சர்சன் , அமெரிக்க நடிகர்
இறப்புகள் 1845 – எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயத் தாதி, சமூக சேவகர் (பி. 1780 ) 1870 – ராபர்ட் ஈ. லீ , அமெரிக்க இராணுவத் தளபதி, பொறியியலாளர் (பி. 1807 ) 1914 – மார்கரெட் ஈ. நைட், அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1838 ) 1946 – வெ. ப. சுப்பிரமணிய முதலியார் , தமிழகக் கால்நடை மருத்துவர், நூலாசிரியர், கவிஞர் (பி. 1857 ) 1967 – ராம் மனோகர் லோகியா , இந்திய அரசியல்வாதி (பி. 1910 ) 1976 – ராணி சந்திரா , மலையாளத் திரைப்பட நடிகை (பி. 1949 ) 1979 – வி. மாணிக்கவாசகம் , மலேசிய அரசியல்வாதி (பி. 1926 ) 1993 – வ. சுப்பையா , தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911 ) 1997 – ஜான் டென்வர் , அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1943 ) 2011 – தென்னிசு இரிட்சி , சி நிரலாகக் மொழியைக் கண் டுபிடித்த அமெரிக்கர் (பி. 1941 ) 2013 – ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (பி. 1920 ) சிறப்பு நாள் கொலம்பசு நாள் ( எல் சால்வடோர் , உருகுவை , வெனிசுவேலா , பெலீசு, கோஸ்ட்டா ரிக்கா ) விடுதலை நாள் ( எக்குவடோரியல் கினி , எசுப்பானியாவிடம் இருந்து 1968) குழந்தைகள் நாள் ( பிரேசில்)
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews