உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 10 ( October 10 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 10, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 10 ( October 10 )




அக்டோபர் 10 ( October 10 )
கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
680 – முகம்மது நபியின் பேரன்
இமாம் உசைன் கர்பலா போரில்
முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள்
ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.
1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில்
சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து
இத்தாலி, போலந்து ,
போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1631 – சாக்சனி இராணுவத்தினர்
பிராகா நகரைக் கைப்பற்றினர்.

1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து,
சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.
1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும்
சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.
1916 – வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது. [1]
1928 – சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1933 – யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
1935 – கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1942 – சோவியத் ஒன்றியம்
ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.
1949 – விடுதலை பெற்ற
இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
1957 – ஐக்கிய இராச்சியம் , கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது
அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.
1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள்
சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1970 – பீஜி , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1970 – மொண்ட்ரியால் நகரில்
கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.
1971 – விற்பனை செய்யப்பட்டு
அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.
1975 – பப்புவா நியூ கினி
ஐநாவில் இணைந்தது.
1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.
1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
1987 – விடுதலைப் புலிகளுக்கும்
இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில்
யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997 – உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.
1998 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு , கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.
2010 – நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.
2015 – துருக்கியின் தலைநகர்
அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்
1684 – ஆண்ட்வான் வாட்டூ , பிரான்சிய ஓவியர் (இ. 1721 )
1731 – என்றி கேவண்டிசு , பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810 )
1813 – ஜூசெப்பே வேர்டி , இத்தாலிய இசையமைப்பாளர் (இ.
1901 )
1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் , அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884 )
1861 – பிரிட்ஜோப் நான்ஸன் ,
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930 )
1898 – யூஜின் வூசுட்டர் , ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977)
1899 – எஸ். ஏ. டாங்கே , இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991 )
1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ.
1997 )
1906 – ஆர். கே. நாராயணன் , இந்திய எழுத்தாளர் (இ. 2001 )
1913 – கிளாட் சிமோன் , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005 )
1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008 )
1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014 )
1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008 )
1936 – கெரார்டு எர்ட்டில் , நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்
1941 – கென் சரோ விவா , நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995 )
1942 – போதிநாத வேலன்சாமி , அமெரிக்க இந்து மதகுரு
1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்
1954 – ரேகா, இந்திய நடிகை
1960 – வடிவேலு , இந்திய தமிழ் நகைச்சுவை நடிகர்
1963 – டேனியல் பெர்ல் , அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ.
2002 )
1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்
1989 – சஞ்சனா கல்ரானி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்
680 – இமாம் உசைன், 3வது சியா
இமாம் , முகம்மது நபியின் பெயரர் (பி. 626 )
827 – வாலண்டைன் (திருத்தந்தை) (பி. 800 )
1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603 )
1744 – யோகான் ஐன்றிச் சூல்ட்சு , செருமானிய அறிவியலாளர் (பி.
1687 )
1929 – எலைஜா மெக்காய் , கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி.
1844 )
1930 – அடால்ஃப் எங்கிளர் , செருமனிய தாவரவியலாளர் (பி.
1844 )
1963 – எடித் பியாஃப், பிரான்சிய பாடகி, நடிகை (பி. 1915)
1973 – லுட்விக் வான் மீசசு , உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1881)
1974 – மு. வரதராசன் , தமிழறிஞர் (பி. 1912 )
1988 – பாபானி பட்டாச்சாரியா , வங்காள எழுத்தாளர் (பி. 1906)
1992 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர்
1997 – டி. ஜெ. அம்பலவாணர் , யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயர் (பி. 1928)
2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (பி. 1916 )
2004 – கிறிஸ்டோபர் ரீவ் , அமெரிக்க நடிகர் (பி. 1952 )
2011 – ஜக்ஜீத் சிங் , இந்தியப் பாடகர் (பி. 1941 )
2015 – மனோரமா , தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937 )
2015 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1931 )
2016 – ரெ. கார்த்திகேசு , மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1940 )
சிறப்பு நாள்
மர நாள் ( போலந்து )
படைத்துறையினர் நாள் ( இலங்கை )
தலைநகர் விடுதலை நாள் ( வியட்நாம் )
விடுதலை நாள் ( பிஜி , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1970)
விடுதலை நாள் ( கியூபா , எசுப்பானியாவிடம் இருந்து, 1868)
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
உலக மனநல நாள்
உலக விண்வெளி வாரம் ( அக்டோபர் 4 - 10 )


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews