உலக வரலாற்றில் இன்று: ஆகத்து 29 ( August 29 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 29, 2018

Comments:0

உலக வரலாற்றில் இன்று: ஆகத்து 29 ( August 29 )


ஆகத்து 29 ( August 29 ) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது.
1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது.
1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1350 – வின்செல்சி போரில்
ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள்
மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன.
1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1498 – வாஸ்கோ ட காமா
கோழிக்கோட்டில் இருந்து
போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
1526 – மோகாக்சு சமரில்
உதுமானியத் துருக்கியர் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரி , பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர்.
1541 – உதுமானியத் துருக்கியர்
அங்கேரியின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர்.
1658 – சீர்திருத்தத் திருச்சபை
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக
ஒல்லாந்து மறைப்பரப்புனர் வண.
பிலிப்பசு பால்டேயசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. [1]
1756 – ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் ஆரம்பமானது. புருசிய மன்னர் இரண்டாம் பிரடெரிக்கு
செருமனியின் சாக்சனியைத் தாக்கினார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்:
றோட் தீவில் பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் முடிவில்லாத போரில் ஈடுபட்டன.
1782 – திருகோணமலை கோட்டையை பிரான்சியர்
பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
1786 – ஐக்கிய அமெரிக்காவில்
மாசச்சூசெட்ஸ் விவசாயிகள் அதிக கடன், வரி பிரச்சினைகளால் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1807 – பிரித்தானியப் படையினர் சர்
ஆரதர் வெல்லசுலி தலைமையில்
கோபனாவன் நகருக்கு வெளியே கோகி என்ற இடத்தில் டென்மார்க்கு படைகளை வென்றனர்.
1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
1842 – நாஞ்சிங் உடன்படிக்கையை அடுத்து முதலாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது.
1869 – உலகின் முதலாவது மலையேற்ற பற்சட்ட இருப்புப்பாதை
வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில்
இலண்டனில் ஆத்திரேலியா
இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான
ஆஷசுத் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
1885 – காட்லீப் டைம்லர் உலகின் முதலாவது உள் எரி பொறி
விசையுந்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1898 – குட்இயர் டயர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து கொரியாவில் சப்பானியரின் ஆட்சி ஆரம்பமானது.
1911 – ஐரோப்பிய அமெரிக்கர்களுடன் கடைசியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட
இஷி என்ற கடைசி பழங்குடி அமெரிக்கர் வடகிழக்கு
கலிபோர்னியாவின் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியே வந்தனர்.
1915 – எஃப்-4 அமெரிக்காவின் விபத்துக்குள்ளான முதலாவது
நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
1916 – பிலிப்பீன்சுகு சுயாட்சி வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றபட்டடது.
1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி 36 குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு
இசுக்காட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கள்.
1941 – இரண்டாம் உலகப் போர்:
எசுத்தோனியாவின் தலைநகர்
தாலின் நாட்சி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்:
செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட
டென்மார்க்கின் அரசை செருமனி கலைத்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: 60,000 சிலோவாக்கியப் படைகள்
நாட்சி ஜெர்மனிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
1949 – சோவியத் ஒன்றியம் தனது
ஜோ 1 என ழைக்கப்பட்ட முதலாவது
அணுக்கரு ஆயுதத்தை
கசக்ஸ்தானில் சோதித்தது.
1950 – கொரியப் போர்:
பிரித்தானியப் படைகள்
கொரியாவில் தரையிறங்கின.
1965 – ஜெமினி V விண்கலம்
புவிக்குத் திரும்பியது.
1966 – எகிப்திய அரசுத்தலைவர்
ஜமால் அப்துல் நாசிரக் கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக எகிப்திய சிந்தனையாளர் சய்யித் கூத்துப் தூக்கிலிடப்பட்டார்.
1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
1982 – செயற்கைத் தனிமம்
மெய்ட்னீரியம் ( அணு எண் 109) முதல் தடவையாக செருமனியில் தொகுக்கப்பட்டது.
1991 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும்
சோவியத் உயர்பீடம் தடை செய்தது.
1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில்
இலங்கைக் கடற்படையினரின்
ஐரிஸ் மோனா என்ற கப்பலை
விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று மலையுடன் மோதியதில் 141 பேர் உயிரிழந்தனர்.
1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள்
இசுலாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2003 – ஈராக்கில் நஜாப் நகரில்
பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் சியா இசுலாம் தலைவர் அயொத்தொல்லா சாயது அல்-அக்கீம் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $125 பில்லியன் சேதம் ஏற்பட்டது.
2012 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காணாமல் போயினர்.

பிறப்புகள்
1632 – ஜான் லாக் , ஆங்கிலேய மருத்துவர், மெய்யியலாளர் (இ.
1704 )
1780 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ் , பிரான்சிய ஓவியர் (இ.
1867 )
1863 – கிடுகு வெங்கட ராமமூர்த்தி , தெலுங்கு எழுத்தாளர், மொழியியலாளர், வரலாற்று ஆய்வாளர் (இ. 1940 )
1887 – ஜீவராஜ் மேத்தா, குஜராத் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1978 )
1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல் , கேரளக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952 )
1905 – தியான் சந்த் , இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (இ. 1979 )
1913 – கே. ஜெயக்கொடி , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1923 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2014 )
1926 – க. இராசாராம் , தமிழக அரசியல்வாதி (இ. 2008 )
1936 – ஜான் மெக்கெய்ன் , அமெரிக்க அரசியல்வாதி (இ. 2018 )
1943 – ஆர்தர் பி. மெக்டொனால்டு ,
நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர்
1943 – விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1949 – கே. ராதாகிருஷ்ணன், இந்திய அறிவியலாளர்
1958 – மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2009 )
1959 – அக்கினேனி நாகார்ஜுனா , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1977 – விஷால் , திரைப்பட நடிகர்

இறப்புகள்
1604 – அமீதா பானு பேகம், முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவி (பி. 1527 )
1976 – காஜி நஸ்ருல் இஸ்லாம் , வங்காளக் கவிஞர், புல்லாங்குழல் மேதை (பி. 1899 )
1985 – எம். கே. ராதா , இந்தியத் தமிழ் நாடக, திரைப்பட நடிகர் (பி.
1910 )
1987 – நயி அல் அலி, பாலத்தீன கேலிச்சித்திர ஓவியர் (பி. 1938 )
2003 – ஒரேசு வெல்கம் பாப்காக் , அமெரிக்க வானியலாளர் (பி. 1912 )
2008 – ஆர்வி , தமிழக எழுத்தாளர் (பி. 1919 )
2005 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (பி. 1904 )
2008 – ஆர்வி , தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (பி. 1918 )
2009 – மாவை வரோதயன் , ஈழத்து எழுத்தாளர்
2015 – வேயின் டையர் , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1940 )
2016 – ஜீன் வைல்டர் , அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1933 )
2017 – ஏ. எச். எம். அஸ்வர் , இலங்கை அரசியல்வாதி (பி. 1937 )

சிறப்பு நாள்
தெலுங்கு மொழி நாள் ( இந்தியா )
அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்
தேசிய விளையாட்டு நாள் ( இந்தியா )
தேசிய எழுச்சி நாள் ( சிலோவாக்கியா )

வெளி இணைப்புகள்
பிபிசி : இந்த நாளில் - (ஆங்கிலம்)
http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/29

நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
http://www.nytimes.com/learning/general/onthisday/20060829.html

கனடா இந்த நாளில்
http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Aug&day=29

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews