Breaking

Wednesday, July 25, 2018

TNPSC: குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று துவக்கம்


டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று துவங்குகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்விற்கான அறிவிக்கை விரைவில் பெறப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு திருச்சி மாவட்ட வேலை நாடும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுநர்களால் நடத்தப்பட உள்ளது. மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள பட்டதாரி மனுதாரர்கள்,

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog