பொறியியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை aucoe.annauniv.edu coe1 . annauniv.edu annauniv.edu ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 500-க்கும் அதிகமான இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு 2-ஆம் பருவம், 4-ஆம் பருவம் மற்றும் 6-ஆம் பருவத்துக்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டன. அதோடு, முதல் பருவ மாணவர்களுக்கான அரியர்' தாள்களுக்கானத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதுபோல முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கும் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
Sunday, July 01, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.