•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 07_*
*_23.07.2018_*
*_திங்கட்கிழமை_*
*_வரலாற்றில் இன்று_*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*நிகழ்வுகள்*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார்.
1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர்.
1793 – புருசியர்கள்இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1829 – ஐக்கிய அமெரிக்காவில்வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் "டைப்போகிராஃபர் என்ற முதலாவதுதட்டச்சியந்திரத்தைக்கானகாப்புரிமத்தைப் பெற்றார்.
1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில்அமைக்கப்பட்டது.
1874 – இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமிஇங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
1881 – சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும்இடையில் எல்லை உடன்பாடுபுவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.
1885 – அமெரிக்க அரசுத்தலைவர்யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப்புற்றுநோய் காரணமாக இறந்தார்.
1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை விற்ற்றது.
1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின்கொலையாளியைக் கண்டுபிடிக்கஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்குகாலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
1921 – சீனப் பொதுவுடமைக் கட்சிஆரம்பிக்கப்பட்டது.
1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
1929 – இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
1942 – பெரும் இன அழிப்பு:போலந்தில் திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத்திறக்கப்பட்டது.
1942 – பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1952 – 1952 எகிப்தியப் புரட்சி:எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜமால் அப்துல் நாசிரின் பின்னணியில் இராணுவத் தளபதி முகமது நாகிப் ஆரம்பித்தார்.
1961 – நிக்கராகுவாவில்சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
1962 – லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில்ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.
1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும்டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
1968 – இசுரேலிய போயிங் 707விமானம் 48 பேருடன் மூன்றுபாலத்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.
1970 – ஓமானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுல்தான் சயீது பின் தைமூர் அவரது மகன் காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1974 – கிரேக்க இராணுவ ஆட்சி கலைந்தது. கிரேக்கத்தின் முன்னாள் பிரதமர் கான்ஸ்தந்தீனசு கரமான்லிசு புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டார்.
1980 – வியட்நாமைச் சேர்ந்த பாம் துவான் சோவியத்தின் சோயுஸ் 37விண்கலத்தில் விண்ணுக்கு சென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1983 – திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள்யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித்தாக்குதல் நடத்தியதில் 13இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1983 – கறுப்பு யூலை: இலங்கையில்இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள்சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
1988 – பர்மாவில் இடம்பெற்றமக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம்ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.
1992 – அப்காசியா ஜோர்ஜியாவிடம்இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – தற்பால்சேர்க்கையாளர்களின்உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை யோசப் ரட்சிங்கர்தலைமையிலான சிறப்புக் குழுவத்திக்கானில் முடிவெடுத்தது.
1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளிசூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
1999 – தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன்கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.
1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டுதமிழ்நாடு, திருநெல்வேலியில்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
2015 – கெப்லர்-452பி என்றபுறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக நாசாஅறிவித்தது.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*பிறப்புகள்*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
1656 – குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664)
1856 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1920)
1890 – பெரி. சுந்தரம், இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1957)
1892 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)
1898 – தாராசங்கர் பந்தோபாத்தியாய், வங்காள எழுத்தாளர் (இ. 1971)
1906 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
1928 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர்
1934 – நிர்மலா ஜோஷி, இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)
1936 – அந்தோணி கென்னடி, அமெரிக்க வழக்கறிஞர்
1947 – எல். சுப்பிரமணியம், தமிழக வயலின் கலைஞர்
1951 – அஜித் ஜெயின், இந்தியத் தொழிலதிபர்
1953 – கிரகாம் கூச், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1953 – நஜீப் துன் ரசாக், மலேசியாவின் 6வது பிரதமர்
1957 – தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)
1967 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (இ. 2014)
1973 – ஹிமேஷ் ரேஷாமியா, இந்தியப் பாடகர், நடிகர்
1975 – சூர்யா, தமிழக நடிகர்
1976 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி
1976 – ஜூடிட் போல்கர், அங்கேரிய சதுரங்க வீரர்
1982 – பவுல் வெஸ்லி, அமெரிக்க நடிகர்
1989 – டேனியல் ராட்க்ளிஃப், ஆங்கிலேய நடிகர்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*இறப்புகள்*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
1577 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504)
1885 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்காவின் 18வதுஅரசுத்தலைவர் (பி. 1822)
1925 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)
1927 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவத் தளபதி (பி.1864)
1942 – வால்டெமர் பவுல்சன், டென்மார்க் பொறியியலாளர் (பி.1869)
1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்
1957 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)
1974 – ஹரி கிருஷ்ண கோனார், இந்திய மேற்கு வங்க அரசியல்வாதி (பி. 1915)
1976 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (பி. 1890)
1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலி அறிவிப்பாளர்
2012 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (பி. 1951)
2012 – இலட்சுமி சாகல், இந்திய அரசியல்வாதி (பி. 1914)
2013 – மஞ்சுளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1953)
2014 – சி. நயினார் முகம்மது, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர்
2016 – சையது ஐதர் ராசா, இந்திய-பிரான்சிய ஓவியர் (பி. 1922)
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*சிறப்பு நாள்*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
குழந்தைகள் நாள் (இந்தோனேசியா)
புரட்சி நாள் (எகிப்து, 1952)
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.