வரலாற்றில் இன்று ஜுலை 21. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 21, 2018

Comments:0

வரலாற்றில் இன்று ஜுலை 21.



ஜுலை 21 (July 21) கிரிகோரியன் ஆண்டின் 202 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 203 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 163 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. 1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.
1718 – ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. 1774 – ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர். 1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள். 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது. 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது). 1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1961 – நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார். 1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர். 1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர். 1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது. 2007 – ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

பிறப்புகள்
1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961) 1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 2014)

இறப்புகள்
1920 – அன்னை சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853) 1926 – ஃபிரெடெரிக் ஹன்டர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1886) 1998 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (பி. 1923) 2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927) 2009 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913) 2010 – டேவிட் வாரன், கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர்.

சிறப்பு நாள்
பெல்ஜியம் – தேசிய நாள் பொலீவியா – மாவீரர் நாள் குவாம் – விடுதலை நாள் (1944) சிங்கப்பூர் – இன சமத்துவ நாள்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews