வரலாற்றில் இன்று 19.07.2018 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 19, 2018

Comments:0

வரலாற்றில் இன்று 19.07.2018




சூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்
1545 – இங்கிலாந்தின் “மேரி றோஸ்” என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்” என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். 1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள். 1870 – பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது. 1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று. 1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர். 1947 – பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். 1967 – வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது. 1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின. 1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர். 1996 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

பிறப்புகள்
1827 – மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857) 1893 – விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930) 1938 – ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர் 1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்
1979 – மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை

இறப்புகள்
1947 – சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892) 1947 – ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915) 1987 – ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942) 2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)

சிறப்பு நாள்
மியான்மார் – பர்மிய மாவீரர் நாள் நிக்கரகுவா – தேசிய விடுதலை நாள் (1979)

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews