புதுச்சேரியில் எம்பிபிஎஸ்(MBBS) மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 30, 2018

Comments:0

புதுச்சேரியில் எம்பிபிஎஸ்(MBBS) மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு



பு துச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டது.

புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்டாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சிபிஐ ரெய்டு நடை பெற்றது. அதைத்தொடர்ந்து, சென்டாக் குழு மாற்றி அமைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews