தொலைதூரக்கல்வி படிப்புகளில் ஜூலை 15 வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு பல்கலைக்கழக மான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. பிளஸ் 2 முடிக்காத, 18 வயது நிரம்பியவர்கள் பட்டப் படிப்பில் சேர வகை செய்யும் 6 மாத கால இளங்கலை முன்தயாரிப்பு படிப்பும், சிஏ, ஏசிஎஸ், ஐசிடபிள்யூஏ படித்துக்கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு பி.காம். படிப்பும் வழங்கப்படுகிறது.
இளங்கலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எவ்வித கல்விக்கட்டணமும் செலுத்த தேவை யில்லை. 2018-ம் ஆண்டின் ஜூலை பருவ மாணவர் சேர்க்கையின்கீழ் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் ஜூலை 15-ம் தேதி வரை சேரலாம். ஆன்லைன் (www.ignou.ac.in) மூலமாகவும் மாணவர் சேர்க்கை செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ள லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.