அரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் சென்னயைில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கலைவானர் அரங்கம் அருகே இருந்து புறப்பட்ட அவர்கள் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை வழியாக தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து அரசு விருந்தினர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை அடுத்து தலைமை செயலகம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடாதபடி போலீசார் சாலைகளில் தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தடையை மீறி உள்ளே சென்ற மாணவர் பெருமன்றத்தினர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.